திரைப்பட தயாரிப்பாளராகும் பிரபல மச்சான் நடிகை..

Actress Namitha turns As Film producer

by Chandru, Oct 20, 2020, 13:54 PM IST

தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகமானவர் நமீதா. முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மகா நடிகன், ஏய், இங்கிலிஷ்காரன் என பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் 2004ம் ஆண்டில் தொடங்கிய அவரது பயணம் 2020வரை தொடர்கிறது. ஹீரோயினாக நடித்து வந்த நமீதா ஒரு கட்டத்தில் மாறுபட்ட வேடங்களையும் ஏற்று நடித்தார். 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திரா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு குடும்பத்தில் கவனம் செலுத்தி வருகிறார். பின்னர் டிவி ஷோக்களில் பங்கேற்றார்.

தற்போது நமீதா சினிமா தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். தமிழ் ரசிகர்களை மச்சான் என்று உறவு முறை வைத்து அழைத்து அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர் நமீதா. சினிமா தயாரிப்பாளராகி இருக்கும் நமீதா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து படத்தை டைரக்டு செய்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கார்டை வரும் 26ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வெளியிடுகிறார் நமீதா. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் விவரங்கள் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை