பிரபல இயக்குனர் மகன் டைரக்‌ஷனில் உறுமீன் ஹீரோ..

K.Rajeswar Son Directing Bobby Simha New Movie

by Chandru, Oct 20, 2020, 15:23 PM IST

நேரம், பீட்சா, இஞ்சி இடுப்பழகி, உறுமீன், கோ2, இறைவி , திருட்டு பயலே2 போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. மாறுபட்ட கதைக்களங்கள் என்றால் இவரின் இயக்குனர்களுக்கு இவரின் ஞாபகம்தான் வரும். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா தற்போது புதிய படமொன்றில் மீண்டும் நடிக்கிறார்.5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப் பட உலகில் பிரபலமானவர் விக்ரம் ராஜேஷ்வர். அவர் பாபி சிம்ஹா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதற்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா.

தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக் கொண்டால், அதில் 'அவள் அப்படித்தான்', 'கடலோர கவிதைகள்' உள்ளிட்ட படங்கள் இடம் பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்குச் சொந்தக்காரரான கே.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர்.'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோர கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி', மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கே.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், 'நியாய தராசு', 'அமரன்', 'துரைமுகம்', 'அதே மனிதன்', 'இந்திர விழா' மற்றும் பல படங்களையும் K.ராஜேஷ்வர் இயக்கியுள்ளார்.

பாபி சிம்ஹா நடிக்க விக்ரம் ராஜேஷ்வர் இயக்கும் கேங்க்ஸ்டர் படத்துக்கும் கே.ராஜேஷ்வர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இதுவொரு வெற்றிப் படமாகத் தருவதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை