திரைப்படங்கள் உருவாக்குவதில் புதிய முயற்சிகள் கையாளப்படுகின்றன. அதன் மூலம் படத்தை மக்கள் மத்தியில் பேச வைக்கின்றனர். ஒரே ஷாட்டில் டிராமா என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர். 8 மணி நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க 180 நாட்கள் நடிகர்கள், டெக்னீஷியன்களை ட்ரில் வாங்கினர்.
நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்லா நடித்திருக்கும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் . எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் படப் பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.
இதுபற்றி படத்தின் இயக்குனர் அஜூ கூறியதாவது:கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிடப் பிரமாதமாக வந்திருக்கிறது.ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவினரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அர்ப்பணிப்பாலும் இந்த முயற்சி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத் தரும்.இவ்வாறு இயக்குனர் அஜூ கூறினார்.
ஏற்கனவே நடிகர் பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படம் ஒரேவொருவர் நடிக்கும் படமாக உருவானது. இப்படத்தைப் பார்த்திபனே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பல்வேறு விருதுகளை வென்றது.