தீபாவளிக்கு நயன்தாரா படம் ரிலீஸ், திடீர் அறிவிப்பு..!

Advertisement

தீபாவளி நெருங்கி விட்டது. ஆனால் கொரோனா விலகாமல் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது. சினிமா தியேட்டர்களை திறக்கலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடந்துக் கொண்டே இருக்கிறது.சினிமா தியேட்டர்களை திறக்கவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதித்து நடத்தவும் ஏற்கனவே மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தாலும் தமிழ் நாட்டில் மட்டும் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி தராமலிருக்கிறது.

இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன் முதல்வரை அவரது இல்லத்தில் தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தியேட்டர்களை திறக்க அனுமதி கோரினார். அதுகுறித்து டாக்டர்களிடம் ஆலோசித்து விட்டு 28ம் தேதி சொல்வதாக முதல்வர் கூறினார்.

தியேட்டரில் தீபாவளிக்குப் படங்கள் வருகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஒடிடியில் தீபாவளிக்கு நயன்தாரா படம் வெளியாவது உறுதி ஆகி இருக்கிறது.டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் தீபாவளி தினத்தில் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கி உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என இன்று அறிவிக்கப்பட்டதுடன் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதுபற்றி ஆர் ஜே பாலாஜி கூறும்போது.கடந்த 15 வருடமாக பக்தி படமே வரவில்லை. ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா நடித்ததற்குப் பிறகு பக்தி படம் வரவில்லை எனவே தான் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் இயக்கினேன்.

இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் இயக்கவும் எண்ணி உள்ளேன் என்றார்.அதேபோல் டிஸ்னி பிஸஸ் ஹாட் ஸ்டாரில் சத்யராஜ், சீதா நடிப்பில் மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட், வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கும் லைவ் டெலிகாஸ்ட், ஜெய், வாணி போஜன் நடிக்கும் ட்ரிப்பிள்ஸ், தமன்னா நடிக்கும் நவம்பர் ஸ்டோரிஸ் ஆகிய சீரிஸ்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. அதற்கான அறிமுக நிகழ்ச்சி டிஜிட்டல் தளத்தில் இன்று நடந்தது. இதில் கலைஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>