பிரபல நடிகருக்கு தங்கையாகும் ஹீரோயின்..

Actress Nadhitha Swetha join Simbu film

by Chandru, Oct 24, 2020, 10:06 AM IST

கடைசியாக வைபவ்வின் டாணா படத்தில் நடித்த நந்திதா ஸ்வேதா, அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சிம்பு என்கிற எஸ்.டி.ஆர் தனது 46 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் அக்டோபர் 26 ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று வெளியிடுகிறார். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களை இயக்கி சுசீந்திரன் சிம்பு நடிக்கும் 46வது படத்தைக் கிராமத்து பின்னணியில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக் கல்லில் தொடங்கி ஒரு வாரத்துக்கு மேலாக நடை பெற்று வருகிறது. 30 நாட்களில் இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர். சிம்பு பங்கேற்று நடித்து வருகிறார்.

இதில் சிம்புவுடன் நடிக்கப் போவது யார் என்று கேட்ட நிலையில் அட்டகத்தி நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கவிருப்பது உறுதி ஆகி இருக்கிறது. ஆனால் சிம்புவின் தங்கையாக நந்திதா நடிக்க உள்ளார். நடிகைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் இதனை உறுதிப்படுத்தியது, இப்படம் கிராமத்துப் பின்னணியிலான அண்ணன் தங்கை பாசக் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் சிம்பு தவிர இன்னும் படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட யார் பெயரையும் படத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒரிரூ நாளில் அதுபற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு, ஜெயம் ரவியுடன் பூமி படத்தில் நடித்திருக்கும் நடிகை நிதி அகர்வால் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பார் தகவல் வெளியானது அதனை இன்னும் படத் தரப்பினர் உறுதிபடுத்தவில்லை. எஸ்டிஆர் 46 படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.நடிகர் சிம்பு சமூக ஊடகங்களிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஒதுங்கி இருந்து வந்தார். தற்போது சமூக ஊடகங்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்திலும் பெரிய அளவில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் ஒரு காட்சியைப் பகிர்ந்து கொண்டார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை