ஷூட்டிங்கில் பங்கேற்ற பிரபல நடிகைக்கு கொரோனா..

Popular Actress Tested Postive COVIT19

by Chandru, Oct 24, 2020, 14:25 PM IST

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு மற்றும் டிவி சீரியல், டிவி ரியாலிட்டி ஷோக்கள் நடந்து வருகின்றன. பணிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. இதனால் படப்பிடிப்பில் பங்கேற்க வரும் நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள். தொழிலாளர்களுக்கு முதலில் கொரோன பரிசோதனை செய்த பிறகே பணிக்கு அனுமதிக்கப்படுகிறர்கள். அதையும் தாண்டி ஷூட்டிங் தளத்துக்குள் கொரோனா நுழைந்து விடுகிறது. தமிழில் கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மி கவுதம். இதில் சாந்தனு, சந்தானம் நடித்திருந்தனர். இந்தி, தெலுங்கு படங்களிலும் ராஷ்மி நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் நடத்துகிறார்.

ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று நடித்தார். அவருடன் சுதீர் நடித்தார். சுதிரூக்கு கோரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் நடித்த ராஷ்மிக்கும் சோதனை செய்யப்பட்டது. அவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு அறிகுறிகள் தெரியவந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ராஷ்மி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சுதீர், ராஷ்மி இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதால் படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நடிகை தமன்னா சமீபத்தில் வெப் சீரீஸில் நடிப்பதற்காக ஐதராபாத் வந்தார். படப்பிடிப்பில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். ஏற்கனவே அமிதாப்பச்சன், அப்ஷேக் பச்சன், விஷால் ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி போன்ற பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை