சொந்த வாழ்க்கையை வியாபாரமாக்கிய வனிதா.. வனிதாவின் உள்நோக்கத்தை புட்டு புட்டு வைக்கும் பிக் பாஸ் நடிகை..!

kasthuri express about vanitha vijayakumar recent video

by Logeswari, Oct 24, 2020, 20:12 PM IST

வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து ஒரே விமர்சனம், சண்டை, சச்சரவு தான்.. அதுவும் கொரோனாவின் தாக்கத்தை விட வனிதாவின் 3வது திருமணம் தான் அதிகமாக பேசப்பட்டது. அரசாங்கம் ஊரடங்கை பிறப்பித்தபோது பொழுது சில பேருக்கு இது தான் பொழுது போக்காக விளங்கியது.

இவரின் திருமணத்தை பற்றி பல பிரபலங்கள் தங்களது விமர்சங்களை துணிச்சலாக தெரிவித்து வந்தனர். ஆனால் நமது வனிதா அக்கா அவர்களின் மூக்கு உடைவது போல அவர்களை பற்றி பல விஷயங்களை தெரிவித்து இருந்தார். பிறகு வனிதா,அவரது கணவர் பீட்டர் பால்,குழந்தைகள் என அழகான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். குடும்பத்தோடு வெளியே சென்று புதிய காதல் ஜோடிகள் போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் வனிதா குடும்பத்தோடு கோவாவிற்கு சென்று வந்த பிறகு தனது 3வது கணவரை பிரிந்து விட்டார் எனவும் பீட்டர் பாலை வீட்டை விட்டு துரத்தி அடித்ததாகவும் இணையதளத்தில் வைரலாகி வந்தது. இதற்கு ஒரு விடியோவில் பதில் அளித்து பல அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டார் வனிதா.

இதை குறித்து பிக் பாஸ் நடிகையான கஸ்தூரி வனிதா சொல்வது எல்லாம் பொய்.. அவரது சொந்த வாழ்க்கையை மீடியாவில் சொல்லி வியாபாரமாக்குவது போல் இருக்கிறது. இவர் பீட்டருக்காக மருத்துவமனையில் செலவு செய்த பணத்தை திரும்பி பெற புது யுக்தியை முயற்சி செய்து வருகிறார் என்று திட்டவட்டமாக கஸ்தூரி கூறினார்...

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை