ரூ 100 கோடி கொட்டி பங்களா வாங்கிய சூப்பர் ஹீரோ.. 38 ஆயிரம் சதுர அடி பரப்பால் வியப்பு..

Hrithik Roshan Buys Apartments Worth Almost Rs 100 Crore superstar Hrithik Roshan, 100 Crore Apartments.

by Chandru, Oct 26, 2020, 10:56 AM IST

சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கூட சில கோடிகள் கொட்டி கடற்கரையோரம் பங்களா கட்டுகிறார்கள். அவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஹீரோ ஒருவர். இந்தியில் சூப்பர் ஹீரோ படங்களில் நடித்திருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சுமார் 100 கோடி கொட்டி பங்களா வாங்கி இருக்கிறார்.மும்பை ஜுஹு வெர்சோவா லிங்க் சாலையில் 14வது. 15வது, 16வது குடியிருப்பு என 3 மாடிகளில் உள்ள அடுக்கு மாடி பங்களாக்களை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி இருக்கிறார்.

இந்த பங்களாக்கள் அரபிக்கடலின் எழில் கண்கொள்ளாக் காட்சியை இடையூறு இல்லாமல் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மொத்தம் 38000 சதுர அடி பரப்பில் இந்த சொகுசு வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. மொட்டை மாடி மட்டும் 6500 சதுர அடி பரப்புள்ளது. தவிர குடும்பத்தினருக்காக மொத்தம் 10 பார்க்கிங் இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பங்களாக்களில் 15 மற்றும் 16வது குடியிருப்புகள் டூப்ளக்ஸ் மாடல் கொண்டவை இந்த இரண்டும் 67.50 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு குடியிருப்புக்கு 30 கோடி கொடுத்திருக்கிறார். கடந்த வாரத்தில் இதற்கான டீல் பேசி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மொத்தமாக 97.5 கோடி மதிப்பாகும்.ஹிருத்திக் ரோஷன் இந்தியில் பிரபலமான நடிகர் அவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. கிரிஷ் உள்ளிட்ட அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது, சில வருடங்களுக்கு முன் ஹிருத்திக்கிற்கும் பழைய காதலி கங்கனா ரனாவத்துக்கும் மோதல் ஏற்பட்டது.

ஹிருத்திக் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகப் பகிரங்கமாகப் பேட்டி அளித்தார். கோர்ட்டிலும்,போலீசிலும் வழக்குப் பதிவு செய்தார். அதனை ஹிருத்திக் மறுத்தார். மேலும் ஹிருத்திக்கிற்கு சுசேன் கான் என்ற மனைவி, 2 பிள்ளைகள் இருக்கின்றனர். சுசேன்கான். ஹிருத்திக் கடந்த 2014 ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். தற்போது அவர்கள் தொடர்பில் இருக்கின்றனர். ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் பிரபல இந்திபட இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிருத்திக் நடித்த படங்களை அவரே இயக்கி உள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை