கொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..

by Chandru, Oct 27, 2020, 15:44 PM IST

கொரோனா வைரஸ் தாண்டவம் இன்னும் அடங்க வில்லை. எளியவர் பணக்காரர் என்ற பேதமில்லாமல் அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. திரையுலகில் ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, தமன்னா போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமும் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். அவருக்கு கொரோனா குணம் அடைந்தாலும் நுரையீரல் பாதிப்பால் இறந்தார்.

இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகர் மரணம் அடைந்திருக்கிறார். குஜராத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் நரேஷ் கனோடியா. அங்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பைப் போல் புகழ் பெற்றவர். நரேஷுக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அவரது மரணச் செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அவருக்கு இரங்கல் செய்தி பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நடிகரின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்,நரேஷ் கனோடியா மறைவு அறிந்து வருத்தம் அடைந்தேன். குஜராத் திரையுலகில் அவர் ஒரு சாதனையாளர். முன்னாள் எம் எல் ஏ. திரையுலகுக்கு அவரது பங்களிப்பு மிகவும் பெரியது. அது எப்போதும் நினைவு கூறப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை