கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவருபவர் சுரேந்திர பந்த்வால். இவர் முதன் முதலில் துளு மொழி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பிறகு இவரின் நடிப்பு திறமையால் மேல் மேலும் வளர்ந்து தற்பொழுது கன்னட திரையுலகில் கொடி கட்டி வாழ்ந்து வருகிறார். இவருக்கு 39 வயது ஆன நிலையில் கர்நாடக மாநிலத்தில் அடுக்குமாடி இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று சுரேந்திரின் நெருங்கிய நண்பர் தொலைபேசியில் அழைத்துள்ளார். பதில் அளிக்கவில்லை என்ற காரணத்தினால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் அடுத்த நாள் நேரிலே அவரை சந்திக்க வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது சுரேந்திரன் சரமாக கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் போலீஸில் தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்த போலீஸ் சுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பண பிரச்சனையில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீஸ் யூகித்து அந்த கோணத்தில் இருந்து விசாரணை ஆரம்பித்துள்ளது. இவரின் மரணத்தை அடுத்து திரையுலகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.