பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து பல சர்ச்சைகள், பிரச்சனைகள் என அனைத்தையும் தனி ஆளாக நின்று சமாளித்து வருகிறார் நமது வனிதா அக்கா. பிரச்சனையை இவரே தேடி போகிறாரா?? அல்லது பிரச்சனை இவரை தேடி வருகிறதா??என்பது இப்பொழுது வரைக்கும் ஒரு கேள்விக்குறியாக தான் உள்ளது. ஒரு வழியாக பிக் பாஸ் பிரச்சனை ஓய்ந்த நிலையில் வனிதா மூன்றாவதாக அதுவும் வேறோரு பெண்ணின் கணவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று சமூக வலைத்தளங்கள் முழுவதும் காட்டு தீ போல் கொளுந்து விட்டு எரிந்தது. இதனை எல்லாம் தாண்டி வனிதா திருமணத்தை முடித்து பீட்டர் பாலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்று திரும்பி வரும் வேளையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு பிரிந்ததாக இணையத்தளம் முழுவதும் பரவியது.
வனிதாவும் அவர் நடத்தி வரும் சேனலில் எதற்காக பீட்டரை பிரிந்தார் என்பதை உருக்கமாக மக்களுக்கு தெரிவித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் நான் பீட்டர் பாலால் ஏமாந்துவிட்டேன்.. எனவும் நான் தோத்து விட்டேன் என்று கண்கலங்கி தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். ஆனால் சில முக்கிய பிரபலங்கள் வனிதா நடிப்பதாகவும் பீட்டருக்காக மருத்துவமனையில் அவர் இழந்த பணத்தை மீண்டும் பெற திட்டம் தீட்டுகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர். இதை நிருபிக்கும் படி வனிதாவும் ஒவ்வொரு வேலையும் செய்கிறார். தற்பொழுது கூட கோவாவில் எடுத்த வீடியோவை அவரது சேனலில் வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வனிதாவின் மகள்கள் மற்றும் பீட்டரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் பீட்டர் பாலை பிரிந்தும் எதற்காக அவர் இருக்கும் வீடியோவை வெளியிடுகிறீர்.. உண்மையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தான் வனிதா இது போல் செய்கிறாரா என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
வனிதாவின் ஆதரவாளர்கள் உங்களை நம்பி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அதனால் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பீட்டர் பால் போல் கேடு கெட்டவனுக்காக செலவு செய்யாமல் வருங்காலத்தில் குழந்தைகளின் நலனுக்காக சேர்த்து வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.