தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் 72 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத் என்பவர் தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் 20 ஆண்டுகளாக வாரங்கலில் உள்ள கீர்த்தி நகரில் வசித்து வந்தார். இவர்களுடன் உறவினர் ரபீகா அவரது குழந்தைகளும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
மசூது அந்த அங்கு உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவருடன் அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. மசூத் மூலம் பழக்கமான சஞ்சய் குமார் யாதவ்க்கு ரபிகாவிற்கு சாப்பாடு தயாரித்துக் கொடுத்து பணத்தைப் பெற்று வந்தார்.
இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் கள்ள ஏற்பட்டது இதனால் மூன்று பிள்ளைகளுடன் ரபிகா சஞ்சய்குமாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ரபிகாவின் மகளுடன் சஞ்சய்குமார் தவறாக நடக்க முயன்றார். இதனை கவனித்த ரபிகா தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லிவிட்டு தனது மகளுடன் பழகுவது சரியல்ல என கண்டித்துள்ளார். இதையடுத்து சஞ்சய் குமார் ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த மார்ச் 7 ஆம் தேதி கரீபிரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சஞ்சய் குமார் ரபிகாவை அழைத்துச் சென் றார். அவருக்கு மோரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். ரபிகா தூங்கியபின் அதிகாலை 3 மணி அளவில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது ரபீகாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு வேறொரு ரயில் மூலம் வாரங்கலிற்கு வந்தார். ரபிகாவை கொலை செய்த பிறகு சில நாட்களில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சஞ்சய்குமாரிடம் மசூதியின் மனைவி நிஷா ரபீகா எங்குச் சென்றார் உன்னுடன் தானே இருந்தார் என நிஷா தொடர்ந்து கேட்டு வந்தார். இதற்கு சஞ்சய்குமார் பீகாரில் உள்ள தனது வீட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளித்து வந்தார். ஆனால் அவனது பேச்சில் நம்பிக்கை இல்லாத நிஷா உண்மையைக் கூறாவிட்டால் போலீசில் புகார் தெரிவிப்பதாக மிரட்டினர். இதனால் ரபிகாவை கொலை செய்தது தெரிந்துவிடும் என்பதால் அதனை மறைப்பதற்காக நிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் 9 பேரையும் கொலை செய்ய சஞ்சய்குமார் திட்டமிட்டார்.
கடந்த மே மாதம் 21ஆம் தேதி மசூதின் மகனுக்கு பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட சஞ்சய்குமார் தூக்க மாத்திரைகளை எடுத்துச் சென்று குளிர்பானத்தில் கலந்து மசூதின் குடும்பத்தினர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற 3 இளைஞர்களுக்கும் கொடுத்துள்ளார். நள்ளிரவில் அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தபோது சஞ்சய்குமார் தனியாளாக ஒவ்வொருவராக கோணிப் பையில் வைத்து அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் இந்த கொலைகளை சஞ்சய் குமார் தான் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று நாட்களில் அவரை போலீசார் கைது செய்தனர். ஒரு கொலையை மறைக்க மேலும் 9 பேரை கொலை செய்த சஞ்சய்குமார் மீதான வழக்கு வாராங்கல் கூடுதல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. ஜெயக்குமார் இன்று சஞ்சய் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.