நடிகைகள் கர்ப்பத்தை காட்டுவது பேஷனாகிவிட்டது மலையேறிய பழங்கதைகள்..

by Chandru, Oct 29, 2020, 11:25 AM IST

பெண்கள் கர்ப்பம் தரித்தால் வேகமாக நடக்கக்கூடாது, கடினமான வேலைகள் செய்யக்கூடாது, கர்ப்பமான தோற்றத்தில் வயிற்றைக் காட்டியபடி செல்வதை யாராவது பார்த்தால் கண் பட்டுவிடும் என்று அந்த காலத்தில் கதைகள் கூறப்பட்டு வந்தன. அதையெல்லாம் இந்தக்காலத்து நடிகைகள் மலையேற வைத்திருக்கின்றனர்.நடிகை எமி ஜாக்ஸன், சமீரா ரெட்டி முதல் தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்தி நடிகை கரீனா கபூர், அனுஷ்கா சர்மா,வரை கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை நெட்டில் பகிரங்கமாகப் பகிர்கின்றனர்.

எமி ஜாக்சன் வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடி டு பீஸ் நீச்சல் உடையில் தனது புகைப்படத்தை வெளியிட்டதுடன் யோகா, உடற்பயிற்சி, பளு தூக்குதல் எனக் கடினமான வேலைகளைச் செய்தார். அதேபோல் சமீரா ரெட்டி கர்ப்பமான தோற்றத்தில் நீச்சல் குளத்தில் நீருக்குள்ளேயே முழ்கி நீந்தியபடி படங்களை வெளியிட்டார். கரீனா கபூர் தற்போது இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பிணி தோற்றத்தில் அவர் தனது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அது வைரலாகி வருகின்றன.

கர்ப்பமாக இருந்தபோதிலும், கரீனா தனது வேலையை நிறுத்தவில்லை. அவர் தனது சகோதரி கரிஷ்மா கபூருடன் முதல் முறையாக ஒரு விளம்பரத்திற்காக நடிக்கிறார்.இருவரும் கரீனாவின் வீட்டில் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுப்பதைக் காண முடிந்தது. கரீஷ்மா கபூர் தனது தங்கை கரீனாவுடன் கூட்டாக நடிக்கவிருப்பதை அறிந்து அவர்களின் ரசிகர்கள் தங்கள் வாழ்த்து பகிர்ந்துள்ளனர். பால்கனியில் கரீனா கேமராவுக்கு முன் நடிக்கத் தயார் ஆகிறார். கரீனா, கரிஷ்மா இருவரும் உயர் கழுத்து டிஷர்ட் காஸ்டியூமில் இருக்கின்றனர். கரிஷ்மா தனது தனி காட்சிகளை நடித்து முடித்த பிறகு பின்னர் கரீனாவும் இணைந்தார்.கர்ப்பமாக இருந்தாலும், தனது உணவில் மற்றும் உடற்பயிற்சியிலும் எந்த மாற்றங்களும் இல்லை என்று கரீனா கூறினார்.

நடிகைகள் எமி ஜாக்ஸன், சமீரா ரெட்டி குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில் இருவரும் மீண்டும் நடிக்கத் தயாராகி வருகின்றனர். சமீரா இந்தியில் நடிக்க முயன்று வரும் நிலையில் எமி ஜாக்ஸன் தமிழில் கவனம் செலுத்துகிறார். கடைசியாக எமி ஜாக்ஸன் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்தார். அப்படத்தில் நடித்த போதே அவருக்கு நிறையப் பட வாய்ப்புகள் வந்தது ஆனால் படம் வெளியாகி ஹிட்டானால் சம்பளத்தை உயர்த்தலாம் என்று எண்ணி வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. ஆனால் படம் வெளியாக மிகவும் காலதாமதமானது. இதையடுத்து அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்குக் காதலனுடன் டேட்டின் செய்ததில் கர்ப்பமானார். திருமணம் செய்யாமலே குழந்தையும் பெற்றுக்கொண்டார். தற்போது தனது உடற்கட்டை நடிப்பதறக்கு ஏற்ப ஃபிட்டாக வைத்துக் காத்திருக்கிறார். ஆனால் யாரும் கால்ஷீட் கேட்டு அணுகியதாகத் தெரியவில்லை.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை