பிரபல டிவி நடிகர், நடிகைக்கு ரகசிய திருமணம்..

by Chandru, Oct 31, 2020, 19:12 PM IST

கொரோனா காலம் வந்தாலும் வந்தது நடிகர், நடிகைகளுக்குக் கல்யாண சீசனும் தொடங்கி விட்டது. காஜல் அகர்வால் திருமணம் நேற்று நடந்தது. ஏற்கனவே ராணா, நடிகை மியா ஜார்ஜ் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் திருமணம் செய்துகொண்டனர். விரைவில் பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்வியாவுக்கு லண்டன் மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் பரவி உள்ளது.

அதேபோல் நடிகை பூனம் பஜ்வாவும் திருமணத்துக்கு ஆயத்தமாகி இருக்கிறார். இத்தனை வருடமாக மறைத்து வைத்திருந்த காதலன் சுனில் ரெட்டியை அவர் நேற்று அம்பலப்படுத்தினார். காதலனுடன் நீச்சல் குளத்தில் உல்லாசமாக நீந்தும் படங்களை வெளியிட்டுக் கிளுகிளுப்பு ஏற்றினார். குடும்பத்தினர் இதை புரிந்து கொண்டு திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் தெய்வமகள், சக்தி, அழகிய தமிழ் மகள் போன்ற பல தொடர்களில் நடித்துள்ள பிரபல சீரியல் நடிகையான உஷா சாய் தற்போது திருமணம் செய்துள்ளார். பிரகாஷ் என்பவரை மணந்திருக்கிறார். இதில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பிரகாஷ் இயக்குனர் மற்றும் நடிகராக ஆவார்.

அதேபோல் விஜய் டிவி நடிகரான ராஜு ஜெயமோகன் தாரிகா என்பவரை திருமணம் செய்துள்ளார். கனா காணும் காலங்கள், கல்லூரி சாலை, சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர் தொடர்களில் இவர் நடித்தவர். நட்புன்னா என்னன்னு தெரியுமா, துணை முதல்வர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜு ஜெயமோகன் கூறும்போது, "என்னுடன் இத்தனை நாட்கள் எல்லாவற்றிலும் துணையாக இருந்ததற்காக நன்றி. நாம் இருவரும் ஒன்றாக இருக்கத் தகுதியானவர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு ரசிகர்கள், சக நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை