தியேட்டர்கள் திறந்தாலும் ஒடிடிக்கு போகும் பிரபல இயக்குனர் படம்..

by Chandru, Nov 1, 2020, 16:10 PM IST

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா ஊரடங்கௌ தளர்விலும் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தியேட்டர்கள் பராமரிக்ககூட முடியாத நிலைமை ஏற்பட்டது. அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஒரு சில தியேட்டர்கள் கல்யாண மண்டபம், வர்த்தக மால்களாக முடிவு செய்தனர். இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. பிற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. தமிழத்தில் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் தியேட்டர் அதிபர்கள் மல்டி பில்ஸ் அதிபர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வர் எட்பாடி பழனிசாமியை சந்தித்து தியேட்டர்கள் மத்திய அரசு கொரோனா வழிகாட்டுதலுடன் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அதிகாரிகள் டாக்டர்களுடன் கலந்து பேசி அறிவிப்பதாக முதல்வர் கூறியிருந்தார். இதற்கிடையில் தியேட்டர்கள் எப்போது திறக்கபடும் என்று தெரியாத சூழல் நிலவியாதால் தியேட்டரில் ரிலீஸ் ஆகவேண்டிய ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெய்ல், க/பெ ரணசிங்கம் போன்ற பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. இதை தொடர்ந்து சூர்யாவின் சூரரைப்போற்று படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது.

போகிற போக்கில் மற்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கும் ஒடிடி தளங்கள் விலை பேச ஆரம்பித்தன. ஆனால் அவர்கள் யாரும் அசைந்து கொடுக்கவில்லை. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜெகமே தந்திரம் படம் வாங்க ஒடிடி தளங்கள் அணுகின ஆனால் அப்படத்தை ஒடிடிக்கு தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் மாவட்ட கலெக்டர், மற்றும் மருத்துவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. 50 சதவித இருக்கைகளுடன் இயங்க கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனைகளுடன் செயல்படலாம் என தெரிவித்திருக்கிறார். இதனால் தியேட்டரில் படங்கள் ரிலீஸ் செய்வது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

ஆனாலும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா ஒடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ரதிந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார். இப்படத்தை நெட்பிளிக்ஸ் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யவிருப்தாக தெரிகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் ஒடிடியில் வெளியானது. மீண்டும் அவர் நடித்துள்ள பூமிகா ஒடிடிக்கு செல்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை