அரசு இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாச வீடியோ.. போலீஸ் கஸ்டடியில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே...

by Nishanth, Nov 6, 2020, 13:01 PM IST

கோவாவில் அரசு இடத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை கோவா போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட் படங்களில் அதிகமாக நடிக்காவிட்டாலும் நடிகை பூனம் பாண்டேவை தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. திடீர் திடீரென சமூக இணையதளங்களில் தன்னுடைய படுகவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தான் இதற்கு காரணமாகும். கடந்த 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல கடந்த சில வருடங்களுக்கு முன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதற்காக சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் கோவாவிலுள்ள கனகோனாவில் மாநில பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சாப்போளி அணைக்கு அருகே இவர் ஆபாச வீடியோ படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆபாச வீடியோ படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமீபத்தில் சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அரசு இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டேவுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் போலீசில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த கோவா அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக கோவா கனகோனா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக நடிகை பூனம் பாண்டேவை போலீசார் தேடி வந்தனர். இதில் அவர் வடக்கு கோவாவில் உள்ள சின்க்வெரிம் என்ற இடத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பூனம் பாண்டேவை கஸ்டடியில் எடுத்தனர். பின்னர் அவர் கனகோனா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை கோவா தெற்கு போலீஸ் சூப்பிரண்டு பங்கஜ் குமார் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே ஆபாச வீடியோ படப்பிடிப்புக்கு பாதுகாப்பு கொடுத்த சம்பவத்தில் கனகோனா போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை