விஜய் படம் கைநழுவிய இயக்குனருக்கு புதிய வாய்ப்பு..

by Chandru, Nov 6, 2020, 12:58 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு எல்லா திட்டத்தையும் தலிகீழாக மாற்றிவிட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணல் போல் கடந்த 7 மாதமாக மூடப்படிருந்த தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டும் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வி எப் எக்ஸ் கட்டணத்தை ரத்து செய்தால் தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் தியேட்டர்காரர்களுக்கு கண்டிஷன் வைக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர் வசூலில் 50 சதவீதம் தியேட்டர்காரர்களுக்கு கொடுத்தால் இந்த டீல் ஓகே என்று தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் வைத்திருக்றார்கள். இதற்கிடையில் தியேட்டர்கள் 10ம் தேதி திறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய படம் வெளியாகுமா? பழைய படம் ரீ ரிலீஸ் ஆகுமா என்பது அன்றைக்குத்தான் தெரியும்.

மாஸ்டர் படத்தை முடித்ததால் மற்ற இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் விஜய். ஏ.ஆர். முருகதாஸ் மகிழ் திருமேனியிடம் கதை கேட்டார். இருவர் கதையும் பிடித்திருந்த நிலையில் நடிக்க எண்ணி இருந்தார். மகிழ் திருமேனியிடம் சற்று வெயிட் செய்யும்படி விஜய் கூறியிருந்தாராம். ஆனால் அவர் இதற்கிடையில் மற்றொரு படத்தை இயக்க முடிவானதால் விஜய் படத் தை இயக்கும் வாய்ப்பு கை நழுவியது. மகிழ்திருமேனிக்கு தற்போது மற்றொரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் Production No 14 படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

தடம் வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, சைக்கோ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார்.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க இணை தயாரிப்பு செய்கிறார்கள் எம். செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜீன் துரை, இசை அரோல் கரோலி, ஒளிப்பதிவு கே.தில்ராஜ், கலை டி.ராமலிங்கம், படத் தொகுப்பு ஶ்ரீகாந்த் என் பி, பாடல்கள் மதன் கார்க்கி, படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை