அடையாளம் தெரியாமல் மாறிய வடிவேலு முறைப்பெண் நடிகை..

by Chandru, Nov 6, 2020, 16:10 PM IST

தலைநகரம் படத்தில் வடிவேலு முறைப்பெண்ணாக நடித்தவர் ஜோதிர் மய். வடிவேலுவைப் பார்த்தாலே மயங்கி விழும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பெரியார். அறை எண் 305ல் கடவுள் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். தொடர்ச்சியா பட வாய்ப்பு வராத நிலையில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் அமல் நீரட்டை திருமணம் செய்துகொண்டார்.

ஜோதிர் மய் சினிமாவில் நடித்து 7 வருடம் ஆகிறது. சினிமாவுக்கு முழுக்கு போட்டவர் அதன்பிறகு எங்கும் அதிகம் தலைகாட்டுவதில்லை. இந்நிலையில் நடிகை நஸ்ரியாவுடன் கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நஸ்ரியாவை நன்றாகவே அடையாளம் தெரிகிறது. ஜோதிர்மயியைத்தான் அடையாளமே தெரியவில்லை.கொரோனா லாக்டவுனில் ஜோதிர்மய் தலையை மொட்டை அடித்திருந்தார்.

தற்போது தனது புதிய தோற்றத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் அவரது தோற்றத்தை ரசிகர்கள் ரசிக்கவில்லை ஆனாலும் இப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.நஸ்ரியா ஜோதிர்மய்யுடன் இருக்கும் படங்களைப் பார்த்து அவரது தோழி நடிகைகள் ஸ்ரீந்தா, ரிமா கல்லிங்கல் போன்ற பிரபலங்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.ஜோதிர்மய் இனி சினிமாவில் நடிக்க மாட்டார். ஆனால் நஸ்ரியாவுக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. அதை அவர் ஏற்காமலிருக்கிறார்.

நஸ்ரியா சினிமாவில் நடிக்காவிட்டாலும் வசதி வாய்ப்புடன் இருக்கிறார். அவரது கணவர் பஹத் பாசில் நஸ்ரியாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறார். சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கி நஸ்ரியாவுக்கு பரிசளித்தார் பஹத். இப்படியொரு கணவர் கிடைத்த பின் நஸ்ரியா நடிப்பைப் பற்றி ஏன் கவலைப் படப்போகிறார் என்று நெட்டிஸன்கள் கமென்ட் பகிர்கின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை