ஒரு சில சீனியர் ஹீரோக்கள் தங்களுக்கு ஏற்ற ஜோடிகளைத் தேடாமல் வயதில் குறைந்த நடிகைகளை ஹீரோயினாக தேர்வு செய்து ஜோடி போட்டு நடிக்கிறார்கள். சமீபகாலமாகக் கோலிவுட்டில் சீனியர் ஹீரோக்கள் தங்கள் வயதுக்கேற்ற ஜோடிகளுடன் நடிக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை சீனியர் ஹீரோக்கள் இளம் நடிகை களை ஜோடியாகத் தேர்வு செய்கிறார்கள் அதற்குக் காரணம் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுத்துவிடுகின்றனர்.
மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். அப்படத்தில் பிசாசாக நடித்ததால் அவரது முகமே பெரிதாகக் காட்டப்பட வில்லை. படம் வெற்றி பெற்றும் பிரயகாவுக்கு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. மலையாள படங்களில் நடித்த வந்த பிரயாகா மீண்டும் மலையாள படங்களிடையேயே நடிக்கச் சென்றார்.
திலீப் நடித்த ராம்லீலா, முரளி கோபியுடன் பா வா, தியான் ஶ்ரீனிவாசனுடன் ஒரே முகம், ரோஷன் மாத்யூவுடன் விஸ்வாசபூர்வம் மன்சூர் போன்ற படங்களில் நடித்தார். நீண்ட நாள் கழித்து 'போடா ஆண்டவனே என் பக்கம்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் தொடங்கப்பட வில்லை. இந்நிலையில்தான் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்.டி.பாலகிருஷ்ணா நடிக்க போயபதி ஶ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்க பிரயாகாவுக்கு அழைப்பு வந்தது. இதில் மகிழ்ச்சி அடைந்த பிரயாகா. தெலுங்கு இன்டஸ்ரியில் இந்த படம் மூலம் அறிமுகமானால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்று கனவு கண்டார்.
சமீபத்தில் இப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்தது. பிறகு காட்சிகளைப் பார்த்தபோது பாலகிருஷ்ணாவுக்கும் பிரயாகாவுக்கும் வயது வித்தியாசம் அதிக இருப்பது தெரிந்தது. ஜோடி பொருந்தமில்லாமல் இருவரையும் ஜோடியாக நடிக்க வைப்பதை இயக்குனர் விரும்பவில்லை. இதை யடுத்து பிரயாகாவை அப்படத்திலிருந்து நீக்கிவிட்டார் இயக்குனர்.மனம் நொந்து போனார் பிரயாகா என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் மலையாள படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்.சினிமாவில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்வதும் பின்னர் நீக்குவதும் சகஜமாகி வருகிறது. கடந்த மாதம் நிவேதா பெத்துராஜ் தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஷூட்டிங் தொடங்கியபோது அவர் கால்ஷூட் இல்லை என்று கைவிரித்ததால் நிவேதாவை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.