ரூ 2 கோடி சண்டை காட்சிக்கு வரும் ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்..

முழு படத்தையே ஒரு கோடி, இரண்டு கோடியில் இயக்கும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் படத்தில் ஒரு சண்டை காட்சிக்கு மட்டுமே ரூ 2 கோடி செலவு செய்யப்படுகிறது.
பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிக்கும் படம் ராதே ஷ்யாம். இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. பாலத்தின் மீது ஊர்ந்து செல்லும் ரயிலில், கம்பியை பிடித்து தொங்கியபடி பிரபாஸ். பூஜா ஹெக்டே ரொமான்ஸ் செய்வதுபோல் அந்த காட்சி இடம் பெற்றிருந்தது. கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருந்த நிலையில் 2 வாரத்துக்கு முன் இத்தாலியில் மீண்டும் படப்பிடிப்பு நடத்த படக்குழு சென்றது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டால் அங்கு படப்பிடிப்பு நடத்த கடுமையான கெடுபிடிகள் காட்டப்பட்டது. இதனால் படக்குழுவினர் நினைத்தபடி நினைத்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

தற்போது ராதே ஷ்யாம் படத்திற்காக 2 கோடி செலவில் சண்டை காட்சி படமாக்குகிறார்கள். பிரபாஸை பொருத்தவரை அதிரடியான சண்டை காட்சிகளில் துணிச்சலாக நடிக்கக் கூடியவர் என்பது பாகுபலி படத்திலேயே நிரூபித்தவர். எனவே இப்படத்திற்கான சண்டை காட்சிகள் துணிச்சலான பல ஆக்‌ஷன் காட்சிகளுடன் படமாக்கின்றனர். இதற்காக ஹாலிவுட் பட ஸ்டன்ட் இயக்குனர் நிக் பொவெல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், தி போர்ன் ஐடென்ட்டி உள்ளிட்ட 27 படங்களில் சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வர உள்ளது. அழகான காதல் கதையான இது ஐரோப்பிய பின்னணியில் அமைக்கப்படுகிறது. இதில் பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே ஏற்கனவே அலவைகுந்தபுரமுலூ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். அல்லுவுடன் இணைந்து புட்ட பொம்ம பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பாராட்டு பெற்றது.

இவர் பிரபாஸுடன் முதன்முறையாக இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் பாக்யஸ்ரீ நீண்ட இடை வெளிக்கு பிறகு இப்படத்தில் நடிக்கிறார். இந்தியில் மைனே பியார் கியா படத்தில் நடித்து ஒரே இரவில் பிரபலமானாலும் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் நடிப்பிலிருந்து ஒதுங்கிய நிலையில் மீண்டும் இப்படம் மூலம் நடிக்க வந்திருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds