கிளாமர் ஹீரோயின் தந்தை மரணம்.. நடிகை கதறல், உருக்கமான கடிதம்..

Advertisement

குண்டக்க மண்டக்க, நெஞ்சில் தொடு, தர்மபுரி, மங்காத்தா, காஞ்சனா, நீயா 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் கிளாமர் ஹீரோயினாக நடித்திருப்பவர் லட்சுமி ராய். இவர் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடிக்க முடியவில்லை. அதற்காக காத்திருக்காமல் வந்த வேடங்களை ஏற்று தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். லட்சுமி ராய் என்ற தனது பெயரை ஒரு கட்டத்தில் ராய் லட்சுமி என்றும் மாற்றிக்கொண்டார். இணைய தள பக்கத்தில் படு கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். தற்போது ஜான்சி ஐபிஎஸ் (கன்னடம்) சிண்ட்ரில்லா (தமிழ்), ஆனந்த பைரவி (தெலுங்கு) ஆகிய படங்களில் நடிக்கிறார். லட்சுமி ராய்க்கு தனது தந்தை மீது பாசம் அதிகம். அவர் மரணம் அடைந்தார்.

தந்தை மரணம் அடைந்ததை கண்டு கதறி அழுதார். அவருக்காக இணையதள பக்கத்தில் உருக்கமான கடிதம் எழுதினார். அதில் கூறியிருப்பதாவது: அப்பா உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன். இந்த துக்கத்திலிருந்து நான் மீண்டு வருவது கடினம். ஆனால் இந்த இழப்பால் நான் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன். என்னை போல் வேறு யாரும் உங்கள் மீது பாசம் வைத்திருக்க முடியாது. என்னுடைய இதயம் உண்மையான வலியால் துடிக்கிறது. என் தந்தை இறந்துவிட்டார் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.உங்களுக்கு எவ்வளவு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அதை மிகவும் சிறப்பாகவே செய்தேன் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. ஆனால் உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என்ன நடந்தாலும் எல்லாம் சரியாகி விடும் என்று நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்வீர்கள். நீங்கள் தான் என் முதுகெலும்பு. என் வாழ்வில் எல்லாவற்றையும் நீங்கள் தந்தீர்கள். நான் ஆசிர்வதிக்கப்பட்ட மகள்.

எப்போதும் சுதந்திரமாக தைரியமாக உறுதியாக இரு என்று என்னிடம் அடிக்கடி நீங்கள் சொல்லியது ஏன் என்று இப்போது தான் எனக்கு புரிகிறது. உங்கள் இழப்பை ஒரு நாள் நான் தாங்கிகொள்ள எனக்கு வலிமை தேவை என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருந்தீர்கள். ஆனால் இவ்வளவு வலிமை வேண்டும் என்பது எனக்கு தெரியாது. நீங்கள் தற்போது நல்ல இடத்தில் இருப்பீர்கள் என்று என் மனது சொல்கிறது. அங்கு உங்களுக்கு எந்த வலியும் இருக்காது. அமைதியும் சந்தோஷம் அங்கு இருக்கட்டும். இதை என் இதயத்துக்கு நீங்கள் உணர்ந்துங்கள். நீங்கள் என் பின்னாலிந்ருந்து என்னை வழி நடத்துகிறீர்கள். தொடர்ந்து செல்ல போதுமான வலிமையை தருகிறீர்கள். ஒளி, ஆசி மேலிருந்து நீங்கள் அளிக்கிறீர்கள். இந்த சின்னப் பெண் உங்களை பெருமை அடையச் செய்வாள் என்று நீங்கள் நம்புங்கள்.

உங்கள் ஆசைகள் நிறை வேற்றுவேன். தங்கமான இதயம் ஒன்று திடீரென்று நின்றுவிடுவதுதான் வாழ்க்கையிலேயே மிகவும் கறுப்பான நாள். அது இந்த நாள் தான். கடுமையாக உழைக்கும் கரங்கள் தற்போது ஓய்வெடுக்கிறது. இவ்வாறு லட்சுமி ராய் உருக்கமாக எழுதி உள்ளார். லட்சுமி ராய்க்கு திரையுலகினர், ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>