முதல் படமே கமல் படம்.. ஆனாலும் சோதனை.. தன்னம்பிக்கையால் சாதித்த ரஜினி பட வில்லன்!

Nawazuddin Siddiqui talks about kamal

by Sasitharan, Nov 9, 2020, 21:51 PM IST

பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய நவாஸுதீன், 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்ததாக பேசியுள்ளார். அதுவும் தனது நடிப்பு ஆசான் படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக கூறியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் கமல்தான். கமலின் ஹே ராம் படத்தில் தான் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க உடனே ஓகே சொல்லி நடித்துள்ளார்.

நவாஸுதீனுக்கு இது முதல் படமும் கூட இதனால் பிரீமியர் ஷோவுக்கு தனது நண்பர்களுடன் சென்ற போது, பிரீமியர் ஷோ தொடங்குவதற்கு சற்று முன்பு, கமல் நவாஸுதீனை அழைத்து படத்தின் நீளம் கருதி நவாஸுதீன் நடித்த பாகங்கள் நீக்கியுள்ளதாக அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனாலும் தனது உழைப்பால் மீண்டும் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி தற்போது இந்தியாவின் நல்ல நடிகர்களில் ஒருவர் எனப் பெயர் பெற்றுள்ளார். மேலும், ``கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான். அவரின் நடிப்பால் ஈர்கப்பட்டவன் நான். அவர் ஒரு சிறந்த நடிகர். என்னைப் பொறுத்தவரை அவர் அந்தோனி ஹாப்கின்ஸ்க்கு சமமானவர்" என நெகிழ்ந்து பேசியுள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை