யாரடி நீ மோகினி சீரியலின் வில்லியான ஸ்வேதா திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது..!

by Logeswari, Nov 11, 2020, 19:46 PM IST

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி.. இந்த சீரியலில் வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். சைத்ரா ரெட்டி என்பவர் இந்த சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்தார். இவரது அழகில் மயங்கிய இளைஞர்கள் இன்னும் எழுந்த பாடில்லை. இந்நிலையில் இவருக்கு திருமணம் என்ற செய்தி வெளியானவுடன் இளைஞர்கள் மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கிறார்கள். இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் சோசியல் மீடியாவில் இயங்கி கொண்டிருக்கிறது.

இவருக்கு ராக்கேஷ் என்பவருடன் சில நாட்களுக்கு முன்பு நிச்சயம் முடிந்தது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொள்ளப்போகின்றனர். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று சிலர் மட்டுமே இவர்களது நிச்சயத்தில் கலந்து கொண்டனர். நேற்று அவரது வீட்டிலே உறவினர்கள் முன்னிலையில் நலங்கு நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து இன்று சைத்து மற்றும் ராகேஷ்க்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இவரக்ளின் கல்யாண கோல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சைத்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை