குழந்தைகள் விரும்பி சாப்பிட பேபிகார்ன் ரைஸ்ஸை இப்படி செய்து கொடுங்க..

by Logeswari, Nov 11, 2020, 19:44 PM IST

குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை சமைத்தால் மட்டுமே அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இல்லையென்றால் சாப்பாட்டை தொட்டு கூட பார்க்கமாட்டார்கள். ஆதலால் குழந்தையை அசத்தும் விதமாக தினமும் பல வகை உணவுகளை சமைத்து கொடுங்கள். கொஞ்சம் கூட மீதி வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். குழந்தையை கவரும் விதமாக எப்படி பேபிகார்ன் ரைஸ் செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
உதிராக வடித்த சாதம் - 1 கப்
பேபிகார்ன் - 4
தக்காளி - 4
வெங்காயம் - 1 கப்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சீரகம் - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் அரிசியை வேகவைத்து வடித்து கொள்ளவும்.வடித்த சாதத்தை ஒரு துணியில் பரப்பி ஆறவிட வேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி, பேபி கார்ன் ஆகியவையே பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து கொள்ளவும். பின்னர் பேபி கார்னை வதங்கி கொள்ளவும். நன்றாக பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விட வேண்டும்.

பச்சை வாசனை போன பிறகு அதலில் வடித்த சாதத்தை கொட்டி 10 நிமிடம் நன்றாக கிளற வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கும் பொழுது கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான பேபிகார்ன் ரைஸ் தயார்...

You'r reading குழந்தைகள் விரும்பி சாப்பிட பேபிகார்ன் ரைஸ்ஸை இப்படி செய்து கொடுங்க.. Originally posted on The Subeditor Tamil

More Samayal recipes News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை