பிக் பாஸ் லாஸ்லியா வீட்டில் நிகழ்ந்த எதிர்பாராத சோகம்.. ஆறுதல் கூறி வரும் ரசிகர்கள்..!

by Logeswari, Nov 16, 2020, 12:26 PM IST

இலங்கையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி கடந்த வருடம் பிக் பாஸில் செல்ல வாய்ப்பு கிடைத்ததை அடித்து சரியான முறையில் கையாண்ட லாஸ்லியா பல்லாயிர கணக்கான தமிழ் மக்களை கவர்ந்தார். அவரின் தமிழ் உச்சரிப்பு யாவரையும் நெகிழ செய்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவை காண அவரது குடும்பங்கள் வருகை தந்த பொழுது அவர் எவ்வளவு தந்தை மேல் அன்பு வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் புலப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்று அதிக புகழோடு வெளியே வந்தார் லாஸ்லியா. இவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது.

இவர் சென்னையில் தங்கி பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் வந்தார். அது மட்டும் இல்லாமல் பல வகையான கவர்ச்சி போஸில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டார். அண்மையில் இவருக்கு கனடா மாப்பிளையுடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க போவதாக செய்திகள் கிளம்பியது. இவரது தந்தையின் பெயர் மரியநேசன். இவர் கனடாவில் சுமார் 10 ஆண்டு காலம் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று இரவு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சோசியல் மீடியாவில் லாஸ்லியாவின் தந்தை இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியது.

இதனை உண்மையாக்கும் படி லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராமில் தனது தந்தை புகைப்படத்தை பகிர்ந்து வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இதை அடுத்து மரியநேசனின் உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர உள்ளது. பல ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் லாஸ்லியாவிற்கு ஆறுதல்களை பரிமாறி கொண்டு வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா அவரது தந்தையாக இயக்குனர் சேரனை எண்ணி வந்தார். அவரும் லாஸ்லியாவிற்கு ஆறுதல் கூறியும் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்துள்ளார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை