40 ஆயிரம் திரைப்படப் பாடல்களுக்கு மேல் பாடியவர் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு உடல்நிலை மோசனமானது, மாதக்கணக்கில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று குணம் ஆனது. ஆனாலும் அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டதால் இறுதியில் மரணம் அடைந்தார். திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவருக்காக எழுத்துவா இசையே என்ற அஞ்சலி பாடல் உருவாகி இருக்கிறது. உலக இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்த மறைந்த பாடகர் அமரர் பத்மஸ்ரீ, டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவாக இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் இணைந்து எழுந்து வா இசையே என்ற அஞ்சலிப் பாடலொன்றை உருவாக்கியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கை இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
பாடல் வரிகளை ஜெயலலிதா மறைந்தபோது "வானே இடிந்ததம்மா" என்ற இரங்கல் பாடலை எழுதி கவனம் பெற்ற தமிழ் சினிமா பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியாந் தன், கிருஸ்ண குமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா, மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். வொன்டர் மீடியா புரடக்ஸன் தயாரித்துள்ள இப்பாடலின் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம். ஒலிக்கலவை கோகுல் கிருஸ்ணா, ஒளிப்பதிவு நியாஸ் ஹம்ஸா, சுமதி குமாரசுவாமி, வெங்கட் முரளி.,செம்மையாக்குனர் இமானுவல் பிலிப் ஜோன்ஸன், கணனி வரை கலை சிராஜ், பரபுராத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொராண காரணமாக வெளியீடு தாமதமான இப்பாடல் இன்று வெளியாகிறது.