பவுன்சர் வீச தைரியம் இருக்கிறதா? இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஸ்மித் சவால்

எனக்கு பவுன்சர் வீச இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சவால் விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. 4 டெஸ்ட் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோத உள்ளது. தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பார்க் ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கடந்த இரு தினங்களாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு.

எதிரணி வீரர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து அவர்களை ஆத்திரமூட்ட வைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பார்கள். இந்த வேலையை இப்போது இந்திய வீரர்களிடமும் அவர்கள் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே இந்திய கேப்டன் கோஹ்லியை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்றும், மீறி அவ்வாறு நடந்து கொண்டால் நிலைமை விபரீதமாகி விடும் என்று ஆஸ்திரேலிய வீரர்களை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் கூறியது: இந்திய அணியுடன் விளையாடுவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். நான் பவுன்சர்கள் மற்றும் ஷார்ட் பால்களை திறமையாக எதிர் கொண்டுள்ளேன். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தைரியமிருந்தால் ஷார்ட் பால், பவுன்சர்களை வீசட்டும். அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு மிக நன்றாக தெரியும்.

இந்திய பந்துவீச்சாளர்கள் பவுன்சர்கள் வீச முயற்சித்தால் அது ஆஸ்திரேலியாவுக்கு தான் பயனுள்ளதாக அமையும். கடந்த வருடம் நியூசிலாந்து அணியுடன் மோதியபோது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார். அவரது பந்துவீச்சு மிகவும் எடுபட்டது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களால் தொடர்ந்து பவுன்சர்களை வீச முடியாது. தொடர்ந்து பவுன்சர்கள் மற்றும் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினால் பந்துவீச்சாளர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள் என்று கூறினார். கடந்த வருடம் நியூசிலாந்து அணியுடன் நடந்த போட்டித் தொடரில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் நீல் வாக்னரின் ஷார்ட் பிட்ச் பந்தில் 4 முறை ஸ்மித் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
adam-zampa-talk-about-ipl
ஐபிஎல் முக்கியம் என்பவர்கள் வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்தால் தெரியும் - கொதிக்கும் ஆடம் ஜாம்பா
brett-lee-donates-1-bitcoin-for-oxygen-supplies-for-india
`பேட் கம்மின்ஸ் இன்ஸ்பிரேஷன்... 40 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரட் லீ!
bcci-clarifies-players-fear
கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்
cricket-player-natrajan-surgery
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன்.. என்ன ஆச்சு??
Tag Clouds

READ MORE ABOUT :