ஜி.வி.பிரகாசை பின்தொடரும் ஹாலிவுட் பிரபலம்..

சூர்யா நடிக்க சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' படம் ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பின்னணி இசைக்காக பல்வேறு திரையுலகினரும் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாழ்த்துக்களோடு அடுத்த அதிரடி ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஹாலிவுட்டில் 'லோல்ட் நைட்ஸ்' என்ற ஆல்பத்தின் மூலம் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். அந்த ஆல்பத்தின் 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் கடந்த செப்டம்பர் 17ம் தேதி வெளியானது. அனைத்து பாடல்களுக்கான தளத்திலும் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். அந்தப் பாடல் பெரும் வைரலாகி வரவேற்பைப் பெற்றது. அதற்கு கிடைத்த வரவேற்பால் உலகளவில் பிரபலமான ஜஸ்டின் பீபர், ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் கணக்கைப் பின் தொடர்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்போது, 'கோல்ட் நைட்ஸ்' ஆல்பத்திலிருந்து அடுத்த பாடலுக்கு தயாராகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். 'க்ரையிங் அவுட்' என்ற பெயரிடப்பட் டுள்ள இந்தப் பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். முதல் பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இசைத்தளங்களில் அடுத்தப் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 'க்ரையிங் அவுட்' பாடல் நவம்பர் 19-ம் தேதி மாலை தனுஷ் வெளியிட வுள்ளார். நடிப்பு, படங்களுக்கு இசை ஆகிய பணிகளுக்கு இடையே, 'கோல்ட் நைட்ஸ்' ஆல்பத்துக்காக மிகவும் சிரத்தை எடுத்து பணிபுரிந்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். 'க்ரையிங் அவுட்' பாடலுக்குப் பிறகு இன்னும் பல பாடல்கள் உள்ளது. அவை அனைத்துமே ஜி.வி.பிரகாஷை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என்று உறுதியாக நம்பலாம்!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :