பா.ஜவினர் மதம், கடவுள் என்று தங்களது பிரசாரங்களை முடுக்கிவிடுகின்றனர். சமீபத்தில் கந்த சஷ்டி கவசம்பற்றி விமர்சன வீடியோ வெளியானது, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா ஜ தலைவர் முருகன், வேல் யாத்திரை அறிவித்து நடத்தினார்.சில சாமியார்கள் தங்கள் தான் கடவுளின் ஏஜெண்ட் என்று சொல்லி ஏக்கர் கனக்கில் நிலத்தை வளைத்துப்போட்டு தியான மண்டபம் அமைத்து மக்களை வசியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள மூக்கு குத்தி அம்மன் படம் ஒடிடி தலத்தில் வெளியாகி இருக்கிறது. அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி டைரக்டு செய்திருக்கிறார். இதில் பாஜவை நேரடியாக நயன்தாரா தாக்கி பேசும் வசனங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலத்தை வளைத்துபோட்டு மக்களை தியானம் ஆன்மிகம் என்ற பெயரில் அடிமைபடுத்தி ஆட்டிப்படைக்கிறார் ஒரு சாமியார்.
அங்கு அம்மன் அவதாரமான நயன்தாரா நேரில் தோன்றுகிறார். நயன்தாராவுக்கும் சாமியாருக்கும் நேருக்கு நேர் வார்த்தை மோதல்கள் நடக்கிறது. சாமி ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யணும் என்றால் நேரடியாக சாமியே செய்யலாமே நடுவல எதுக்கு உன்ன மாதிரி புரோக்கர் என்று நயன்தாரா கூற ஆவேச அடைந்த சாமியார், நாங்கள் புரோக்கர் அல்ல மதத்தையும் சாமியையும் காப்பத்துற ஆன்மிக காவலர்கள் என்று கூறுகிறார். இவ்ளோ பெரிய பிரபங்சத்துல நீ தூசி கூட கிடையாது. நீ, கடவுள காப்பாத்திரியா. சரி நியே காப்பாத்து.. சரி எந்த கடவுள காப்பத்துவ. உங்கள உருவாக்குன கடவுளயா.. இல்ல நீங்க எல்லாம் சேர்ந்து உருவாக்கினீங்களே அந்த கடவுளயா? இத செஞ்சா அந்த பரிகாரம் அத செஞ்சா இந்த பரிகாரம்னு பயத்த வச்சிதானே காலத்த ஓட்றிங்க கொஞ்சம் காசு கொடுத்த போதும் பாவத்த ஈஸியா மன்னிச்சுடுவாரு இல்ல..
போதும், உங்கள மாதிரி ஆளுங்க கடவுள காப்பாத்தனது போதும். அவரே அவர அவரே காப்பத்திக்குவாறு.. யாராவது எதாவது ஒரு கேள்வி கேட்டா மதம் பின்னாடி இருக்கு, அந்த நாட்ல இருந்து பணம் வருது இந்த நாட்ல இருந்து பணம் வருதுன்னு சொல்லீடுவீங்க இல்ல..
இவ்வாறு நயன்தாரா மொட்டை சாமியாருடன் தர்க்கம் செய்யும் காட்சிகள் வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. மூக்குத்தி அம்மன் படத்தில் இதுபோன்ற போலி அரசியல் வாதிகள், போலி மதவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வசனங்கள் இருப்பது ட்ரெய்லர் வெளியானபோது இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சில இந்து அமைப்பினர் அதற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்ததுடன் படத்தை ரிலீஸ் செய்யவும் தடை கேட்டனர் என்பது குறிபிடத்தக்கது.