கவலைபடாத மாமா..ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தவசிக்கு ஆறுதல்

by Balaji, Nov 17, 2020, 15:15 PM IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறார் தொடர்ந்து அவருடன் போனில் பேசி கவலைப்படாதே மாமா பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.கவலைப்படாத மாமா பாத்துக்கலாம் செல்போன் மூலம் பேசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலுள்ள நடிகர் தவசிக்கு ஆறுதல் கூறி 1லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் விஜய் சேதுபதி - தவசிக்குக் குவியும் நிதியுதவிகள்.

கிழக்கு சீமையிலே முதல் அண்ணாத்தே வரை 30 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் தவசி. கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வரி டயலாக் மூலம் பிரபலமானார். சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

தற்போது மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மருத்துவச் சிகிச்சை கிடைத்தாலும் குடும்ப பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாகவும், நடிகர்கள் தனக்கு உதவ வேண்டும் எனத் தவசி கோரிக்கை விடுத்தார்,இதனையடுத்து நடிகர் தவசிக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார். தொடர்ந்து அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய விஜய் சேதுபதி, கவலைப்படாத மாமா பாத்துக்கலாம், சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவீங்க.. என்று என ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் 25 ஆயிரம் ரூபாயை நிதியுதவியை சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் மோகன், தவசியிடம் நேரில் வழங்கினார், நடிகர் சூரியின் சார்பில் சூரியின் உணவக மேலாளர் சூரிய பிரகாஷ் 20 ஆயிரம் ரூபாயும், நடிகர் சௌந்திரபாண்டியன் 10ஆயிரம் ரூபாயையும் நேரில் வழங்கினார்கள்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை