தியேட்டரில் ரிலீஸ் ஆன படங்கள் வசூல் எப்படி?

by Chandru, Nov 17, 2020, 14:45 PM IST

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியொட்டி திறக்கப்பட்டன. கொரோனா விதிமுறைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் பல பெரிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. ஆனாலும் சந்தானம் நடித்த பிஸ்கோத் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன.தீபாவளி திருநாளில் புத்தாடை, மத்தாப்பு, இனிப்பு, விருந்து இவையனைத்தையும் தாண்டி நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் புது சினிமா பார்ப்பதென்பது காலந்தோறும் மாறாத பழக்கம்.

இந்த வருடம் பண்டிகை திருநாளில் குறைந்த படங்களே திரையரங்கில் வெளியாகியுள்ளது. சந்தானம் நடித்த பிஸ்கோத், சந்தோஷ் பி ஜெயகுமார் நடித்த இரண்டாம் குத்து, ரிஷி ரித்விக் நடித்த மரிஜுவானா. இப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரங்குகளில் 50 சதவீத டிக்கெட் அனுமதி என்ற போதிலும் அது நிறைவை தருவதாக இருப்பதாக நடிகர் சந்தானம், இயக்குனர் ஆர்.கண்ணன் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் கவனத்தை ஈர்த்துள்ள மற்றொரு படம் “மரிஜீவானா”. இதுவும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. “அட்டு” திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ரிஷி ரித்விக் நடிப்பில் இயக்குநர் எம்.டி . ஆனந்த் “மரிஜீவானா” படத்தை இயக்கியுள்ளார். Third Eye Creations சார்பில் எம்.டி. விஜய் இப்படத்தினை தயாரித்துள்ளார். நடிகர் ரிஷி இது குறித்துக் கூறும்போது.இந்த தீபாவளிக்கு என்னுடைய படம் “மரிஜீவானா” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “அட்டு” திரைப்படத்தின் போது ரசிகர்கள் எனக்கு பெரும் வரவேற்பு தந்தார்கள். ஒரு புதுமுக நடிகனாக இல்லாமல் அவர்களில் ஒருவனாக என்னைக் கொண்டாடினார்கள். “அட்டு” திரைப்படத்தில் முழு ரௌடியாக நடித்திருந்தேன். “மரிஜீவானா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். “அட்டு” போலவே ரசிகர்கள் இப்படத்திலும் எனக்கு பெரும் வரவேற்பு தந்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் எங்கள் படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதே பெரு மகிழ்ச்சியாக உள்ளது. கண்டிப்பாக இப்படம் அனைவரையும் கவரும் அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார். இயக்குநர் எம்.டி ஆனந்த் கூறும்போது,இந்த தீபாவளிக்கு எங்கள் படம் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் போதைப்பொருள் சம்பந்தமாக இதுவரையிலும் தமிழ் சினிமாவில் இல்லாத கோணத்தில் புதுவிதமாக, சமூக நோக்கோடு ஒரு கதையை கூறியுள்ளோம். அனைவருக்கும் பிடிக்கும் படியான வகையில் இப்படம் இருக்கும். தீபாவளி திருநாளில் ரசிகர்கள் தியேட்டர்களில் எங்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளார்கள். விமர்சகர்களும் தரமான மதிப்பீடு தந்துள்ளார்கள். எங்கள் படம் ரசிகர்கள் மனதையும் விமர்சகர்கள் பாராட்டையும் பெற்றது பெரு மகிழ்ச்சி. இந்த “மரிஜீவானா” உங்களைக் கண்டிப்பாகத் திருப்திபடுத்தும் அனைவரும் பாருங்கள். நன்றி என்றார்.

மரிஜீவானா” திரைப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாக நடித்துள்ளார் ஆஷா பார்த்தலோம் நாயகியாக நடித்துள்ளார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் குரு இசையமைக்கப் பால ரோசைய்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். த்ர்ட் ஐ கிரியேஷன்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். தமிழ்த் தாய் கலைக்கூடம் நிறுவனத் தார் தமிழகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

You'r reading தியேட்டரில் ரிலீஸ் ஆன படங்கள் வசூல் எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை