அர்ச்சனா மற்ற போட்டியாளர்களை கலாய்த்த சம்பவம்.. ரியோவின் எமோஷனல் அழுகை.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது??

Advertisement

முந்தின நாள் இரவு முழுவதும் டாஸ்க் நடக்குது. ரெண்டாவது ரவுண்ட். மணிக்கூண்டு டைமுக்கும் பிக்பாஸ் டைமுக்கும் ரெண்டரை மணி நேரம் வித்தியாசம் இருந்தது. மிட்நைட்ல பேய் வேஷம் போடச் சொல்லி டாஸ்க். போன வாரம் தீபாவளி செலவு அதிகமானதால பிக்பாஸ் கடுப்பாயிட்டாரு போல.. இப்படியெல்லாமா டாஸ்க் கொடுப்பாங்க. அதையாவது சீக்ரெட்டா செஞ்சுருக்கலாம்.

அனிதா, சனம், நிஷா டீம் தான் காலைல டாஸ்க் முடிக்கறதுக்கு ரெடியா இருந்தாங்க. 10 நிமிஷம் இருக்கும் போதே அனிதா போய் பாலா டீமை எழுப்பறாங்க. சுச்சி, பாலா ரெண்டு பேரும் எந்திதிக்கவே இல்லை. ரெண்டாவது தடவை வந்து எழுப்பும் போது சுச்சி எந்திரிச்சான்ஹ்க. பாலா எந்திரிச்சு உக்காந்துட்டு மறுபடியும் படுத்துடறான். சுச்சி எந்திரிச்சு போகும் போது "மெதுவா எந்திரிச்சு வா"னு சொல்லிட்டு போறாங்க. என்ன ஒரு வில்லத்தனம். அடுத்து டைம் முடிய ரெண்டு நிமிஷம் இருக்கும் போது ரம்யாவும் எழுப்பறாங்க. ஆனாலும் அசைஞ்சு கொடுக்கலை பாலா. சனம அங்க கவுண்டவுன் முடிக்கும் போது ரம்யா மட்டும் என்ன செய்யறதுனு முழிச்சுட்டு நின்னாங்க. அனிதா வெளிய வர, சனமும் ரம்யாவும் கண்டினியூ பண்ணினங்க. 5 நிமிஷம் ஆகியும் பாலா வரலை.

பெட்ரூம்ல எந்திரிச்சு எதையோ தேடிட்டு இருந்தாரு. அந்த பக்கம் அர்ச்சனா, அனிதா எல்லாரும் திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தாங்க. ஒரு வழியா சட்டையை போட்டுட்டு வந்து சேர்ந்தாரு பாலா. இந்த டாஸ்க்ல முதல் நாள் எந்த பிரச்சினையும் இல்லாம இருந்தது. ரெண்டாவது நாள் ஆரம்பமே பிரச்சினை.

சரி, டாஸ்க் ஆரம்பிச்சுட்டாங்க இனிமே பிரச்சினை இருக்காதுனு நினைச்ச போது பாலா இன்னொரு சம்பவம் பண்ணினாரு. பிக்பாஸ் வீட்டோட டைமுக்கும், மணிக்கூண்டு டைமுக்கும் இருக்கற வித்தியாசத்தை குறைக்கனும்னு முடிவு செஞ்சு, 3 மணி நேரம் செய்ய வேண்டிய டாஸ்க்கை ஒன்றரை மணி நேரத்துல முடிச்சுட்டாங்க. இது சரியா, தப்பானு விவாதிக்க வேண்டிய விஷயமாகிடுச்சு. ஏற்கனவே ரெண்டு வார லக்சரி பட்ஜெட் பாயிண்ட்ஸ் போனதுக்கு பாலா தான் காரணம்.

ஆனா இந்த டைம் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ரம்யா எப்படி சம்மதிச்சாங்கனு தெரியல. ஒரு மணி நேரம் 26 நிமிடங்களுக்கு இந்த டாஸ்க்கை முடிச்சாங்க. அப்ப பிக்பாஸ் டைம் 9.35, மணிக்கூண்டு டைம் 8.00. மார்னிங் வேக்கப் சாங் போடுங்கனு ரம்யா சொன்னதுக்கு அப்புறம் தான் பாட்டு போட்டாங்க.

வாட்டே கருவாட் பாட்டுக்கு ஒரு பக்கம் ரம்யா கலக்கலா டான்ஸ் ஆட, இன்னொரு பக்கம் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட முடியாம போச்சேனு வருத்தத்துல இருந்தாங்க கேப்பி.

மார்னிங் டாஸ்க்ல அர்ச்சனா வீட்ல உள்ளவங்களுக்கு ராசிபலன் சொல்லனும். அவங்களும் முடிஞ்ச வரைக்கும் நல்லா பண்ணினாங்க.

அதுக்கப்புறம் நாள் முழுவதும் இதே டாஸ்க் தான் கண்டினியூ ஆச்சு. ரெண்டு ரவுண்ட் முடிஞ்சு மூணாவது ரவுண்டும் ஸ்டார்ட் ஆச்சு. டெயிலி டாஸ்க்ல ரிவர்ஸ்ல நடக்க சொன்னாங்க. அதில்லாம ஆட்டோ ஓட்டற டாஸ்க் ஒன்னு. கொஞ்சமாவது இண்ட்ரஸ்ட்டா டாஸ்க் கொடுத்திருக்கலாம்.

டாஸ்க் முடிச்சு கிச்சன்ல டைம் அட்ஜெஸ்ட் செஞ்சதை பத்தி எல்லார்கிட்டயும் சொல்றாரு பாலா. எல்லாருக்கும் ஷாக். அங்க சொன்னதை கேட்டுட்டு வந்த சோம் வெளிய டாஸ்க் பண்ணிட்டு இருந்த ஆரி, ரியோ டீம் கிட்ட இந்த விஷயத்தை சொல்றாரு. ஆரி, ரியோ ரெண்டு பேருமே நம்பலை. ரம்யா இருக்கும் போது இப்படி நடந்துருக்க வாய்ப்பில்லைனு சொல்றாரு ரியோ. இந்த பிரச்சினை பேசப்படும் போது ரம்யா தான் அதிகமா பதில் சொல்ல வேண்டி இருக்கும்னு நினைக்கிறேன்.

ஆரி, ரியோ, கேப்பி டீம் 3 மணி நேரத்தை 20 நிமிஷம் லேட்டா முடிச்சாங்க. சாம், சோம், அர்ச்சனா டீம் 4 நிமிஷம் மட்டும் லேட்டா முடிச்சாங்க.

ஆரி மற்றும் ரியோவுக்கு அவரவர் மனையிடம் இருந்து வாழ்த்துச் செய்தி வந்தது. நைட்டாவது டாஸ்க் முடிப்பாங்கனு பார்த்தா தொடர்ந்துட்டே இருக்கு. இன்னிக்கு என்னாகுதுனு பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>