சின்னத்திரையிலும் கோடி கணக்கான பணத்தை அள்ளும் பிரபல நடிகை..! யார் தெரியுமா??

by Logeswari, Nov 19, 2020, 11:39 AM IST

பானா காத்தாடி திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து தனக்கென ஒரு நிரந்திர இடத்தை பிடித்துக்கொண்டவர் தான் சமந்தா. இவர் நடித்த 'நான் ஈ' திரைப்படம் பயங்கர மாஸ் ஹிட் அடித்தது. அதன் பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் இவரை மொய்க்க தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை முன்னிலை கதாநாயகியாக செம கெத்தாக வலம் வருகிறார். நயன்தாராவை அடுத்து கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் பட்டியலில் இவரும் ஒருவர். இதற்கிடையே தெலுங்கு கதாநாயகரான நாக சைதன்யா மற்றும் சமந்தாவிற்கு இடையே காதல் மலர்ந்தது. இருவரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் ஆகிய பிறகும் சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது யாவரும் அறிந்ததே.

அதுவும் இவர் தமிழ் சினிமாவை பிறந்த வீடாகவும் தெலுங்கு சினிமாவை புகுந்த வீடாகவும் கருதி இரண்டு மொழியிலும் போட்டி போட்டு நடித்து கொண்டு வருகிறார். தினமும் உடற்பயிற்சிக்கு என்று நேரத்தை தனியாக ஒதுக்கி உடலை சிக்குன்னு வைத்திருக்கிறார். அதுவும் இவர் திருமணத்திற்கு பிறகு தான் முகம் சுளிக்க வைக்கும் பல வித கவர்ச்சிகள் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சமந்தாவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாளுக்கு முன்பு சமந்தா கர்ப்பமாக உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் சமந்தா அவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இவர் வெள்ளி திரையை தாண்டி சின்னத்திரையிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்கு சான்று தான் சில வாரத்திற்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. அந்த மாற்றத்தை மக்களும் இனிதே வரவேற்த்தனர். இவர் மேலும் OTT தளத்தில் தொகுப்பாளினியாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.அதுவும் முதல் எபிசோடில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவை பேட்டி எடுத்துள்ளார். ஒரு எபிசோடுக்கு 1.5 லட்சம் விகிதமாக மொத்தம் 10 எபிசோடுக்கு 1.5 கோடி கணக்கில் சம்பளமாக சமந்தா பெறுகிறார். இவர் சினிமாவில் கலக்குவது போல சின்னத்திரையிலும் கலக்குவதை பார்த்து மக்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை