வடக்கு லண்டனை சேர்ந்த மிச்செல் லியோனார்டு என்ற பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று அவரது 42வது பிறந்தநாளை குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடும் விதமாக ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். லண்டனில் மிகவும் புகழ் பெற்ற Ocado டெலிவரி நிறுவனத்தில் சிக்கன் விங்ஸ், பிரெட், க்ரிஸ்ப்ஸ், ஒயின் மற்றும் சில ஸ்னாக்ஸ் போன்ற உணவுகளை ஆர்டர் செய்துள்ளார். இவரது மூத்த குழந்தைக்கு வயது 22, நடு குழந்தைக்கு வயது 19, கடைசி குழந்தைக்கு வயது 14 ஆகும். ஆர்டர் செய்த உணவு வந்தவுடன் அவரது கடைசி குழந்தை பார்சலை வாங்கி வந்துள்ளார். அப்போது சாப்பிட உணவு பொட்டலத்தை பிரித்த போது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதலில் உணவுக்கு பதிலாக 3 பாக்கெட் சிறுநீர் இருந்துள்ளது. உணவை டெலிவரி செய்தவர் தான் இந்த கேடுகெட்ட வேலையை செய்திருக்க வேண்டும் என்று மிச்செல் சந்தேகப்பட்டார்.
இதனால் Ocado நிறுவனத்திற்கு புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் விசாரித்த Ocado நிறுவனம் கூறியதாவது:- பரிசோதனைக்கு செல்லும் வேறொருவரின் சீறுநீர் பார்சல் எப்படியோ உணவு பார்சலோடு கலந்து விட்டதாக கூறி அவர்கள் செய்தது தவறு தான் என்று நிறுவனம் தரப்பில் மன்னிப்பு கேட்டனர். அது மட்டும் இல்லாமல் மிச்செல் ஆர்டர் செய்த உணவுக்கான பணம் அவ்ரகளுக்கே திருப்பி கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆர்டர் செய்த உணவை புதிதாக மீண்டும் வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் Ocado நிறுவனம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதை பற்றி மிச்செல் ஊடகத்தில் கூறியது இது மிகவும் தவறான செயல். அதுவும் கொரோனா காலத்தில் இது போன்ற செயல்கள் பாதுகாப்பை உடைப்பது போல் இருக்கிறது என்று மிக மன வருத்தத்துடன் தெரிவித்தார்.