முதல் விர்சுவல் ரியாலிட்டி த்ரில்லர் பப்கோவா அறிவிப்பு..

by Chandru, Nov 19, 2020, 16:14 PM IST

நடிகை விமலா ராமன் நடித்த பப்கோவா வெப் சீரிஸ் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.அதிபயங்கரமான துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுக்கும் சம்பவங்கள் மற்றும் அதற்கு பிறகான சம்பவங்களைப் பற்றிய நான் லீனியர் கதையை கொண்டது பப்கோவா வெப் சீரியஸ். இது இரண்டு வித்தியாசமான கோணங்களில் இருந்து சொல்லப்படும் ஒரு கதை. கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் பற்றி விசாரிக்கும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி பற்றியது ஒரு கதை. மற்றொன்று உயிர் பிழைத்த ஒருவர் காணாமல் போன தனது காதலியைத் தேடும் கதை.

பிரபல நடிகை விமலா ராமன் பெண் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சம்பத் ராம், ஆர்யா, சாரா அன்னையா, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், தேவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'பப்கோவா' வெப் சீரிஸ் லக்ஷ்மி நாராயணா இயக்க, கார்த்தி கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தன் இசை அமைக்கிறார். அஸ்வின் இக்னாஷியஸ் எடிடிங் கவனிக்கிறார். சிவகுமார் கலை அமைக்கிறார்.வரும் 27 முதல் ஜீ5 தளத்தில் 'பப்கோவா' ஒளிபரப்பாகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை