5ஆண்டுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் கில்லி நடிகர்..

by Chandru, Nov 21, 2020, 18:35 PM IST

விக்ரம் நடித்த 'தில்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதைத் தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். ரஜினிகாந்த்தின் சொந்தப் படமான பாபாவிலேயே வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடிச்சென்றது. விஜய் நடித்த கில்லி படத்தில் அவரது தந்தையாகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்

கடந்த 2015ல் தனுஷ் நடித்த 'அநேகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களைத் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் எக்கோ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த 'எக்கோவில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்தியார்த்தியைப் பார்க்கலாம் என்கின்றனர் படக் குழுவினர்.ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் ராஜ் கலை அமைக்கிறார். ராதிகா நடன பயிற்சி அளிக்க டேஞ்சர் மணி சண்டைப் பயிற்சி அளிக்கிறார். தயாரிப்பு நிர்வாகம் பி. எம் சுந்தர். மக்கள் தொடர்பு கே எஸ் கே செல்வா.ஒப்பனை ராமச்சந்திரன்.ஆடை வடிவமைப்பு பாரதி.
பாடல்கள் ஏக்நாத்.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிஷ் வித்யார்த்தி தமிழில் நடிப்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை