பாண்டியன் ஸ்டோர்ஸின் குட்டி தேவதை.. கோலாகலமாக நிகழப்போகும் பெயர் சூட்டு விழா..

by Logeswari, Nov 22, 2020, 20:35 PM IST

தனியார் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது குடும்பங்கள் சம்மந்தமான கதை என்பதால் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அண்ணன் தம்பிகளின் பாசப்போராட்டம் மற்றும் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை எடுத்து கூறும் கதை. இதில் முல்லையாக நடிகை வி ஜே சித்ரா நடிக்கிறார். இவரின் நடிப்புக்கு பல ரசிகர் கூட்டங்கள் அடிமை. இவரை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணியாக நடிக்கிறார் ஹேமா. சீரியலின் கதாபாத்திரத்தின் பெயர் மீனா ஆனால் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

இவரது நடிப்பு மிக க்யூட்டாக இருக்கும். இதனால் பல ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்துள்ளார். சீரியல் மற்றும் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பம் தரித்து சில மாதத்திற்கு முன்பு குழந்தையை பெற்று எடுத்தார். அவர் நடிப்பை மிகவும் நேசிப்பதால் குழந்தை பிறந்த பிறகும் வீட்டில் இருந்தபடியே நடித்து வந்தார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை அளித்து வந்தது.. ஆனால் ரசிகர்கள் மீனா எப்பொழுது திரையில் வருவார் என்று இயக்குனரை நச்சரித்து சில வாரத்திற்கு முன்பு மீனா நடிக்க தொடங்கிவிட்டார்.

ஆனால் மீனா இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கொஞ்சம் மொக்கையாக இருந்தது என்பது முற்றிலும் உண்மை என்று கூறலாம். சீரியலிலும் மீனாவுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து குழந்தையை மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது. அடுத்த வாரத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா மிக கோலாகலமாக கொண்டாடபடவுள்ளது. அதுவும் சீரியல் அரைமணியில் இருந்து மூன்று மணி நேரமாக மாறி கண்ணுக்கு சிறப்பு விருந்தாக அமையவுள்ளது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை