நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த், கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி என பல நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக தமிழ் படங்களில் நடிக்கின்றனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் மயில்சாமி மகன் அன்பு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி நாயகனாக நடிக்கும் படம் அல்டி, கதாநாயகி வேடத்தில் மனிஷாஜித் அறிமுகமாகிறார். சென்றாயன் பிராதன பாத்திரம் ஒன்றில் நடிக்க யாசி, ராபர்ட், மாரி முத்து, ஏ.வெங்கடேஷ், பசங்க சிவகுமார், சிந்து குமாரி, மிப்பு சாமி, சேதுபதி ஜெயசந்திரன் நெல்லை சிவா டி.எஸ்.ஆர். ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். நடனக் காட்சிகளை ராபர்ட் அமைக்கிறார். படத் தொகுப்பை வில்ஸி கவனிக்கிறார். கலை இயக்குநராக சிவகுமார் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை அமைக்கிறார் ஜாக்கி ஜான்சன். தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகன் கவனிக்க ஷேக் முகமது மற்றும் ரஹ்மதுல்லா இருவரும் இணைந்து தயாரிக்க “அல்டி” படத்தை எழுதி இயக்குகிறார் எம்.ஜே.உசேன். கதைப்படி பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகியோருக்குக் கிடைக்கிறது. அந்த வீடியோவால் நடக்கும் களேபரங்களை பரபர, கமர்ஷியல் படமாக சொல்லும் திரைப்படம் தான் “அல்டி”.