என் உடம்பு, எப்படியும் போஸ் தருவேன், நீ யார் கேட்க.. கவர்ச்சி படம் வெளியிட்ட பாடகி கோபம்..

by Chandru, Nov 25, 2020, 09:28 AM IST

நடிகைகள் மட்டுமல்லாமல் அவ்வப்போது சில பாடகிகளும் தங்களது இணைய தள பக்கங்களில் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி போஸ் கொடுத்து அந்த படங்களைப் பகிர்கின்றனர். விசாகப்பட்டணத்தைச் சேர்ந்தவர் திரைப்பட பின்னணி பாடகி சோனா மொஹபத்ரா. என்ஜினியரிங் பட்டதாரி. ஃபேமலி, ஜம்போ, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கூப்சூரத், ஹண்டர் உள்ளிட்ட ஏராளமான இந்தி படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார்.

இவர் ராம் சம்பத் என்ற இசை அமைப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார்.அனுமாலிக் மற்றும் கைலாஷ் கெர் ஆகிய இருவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பாலியல் சீண்டல் குறித்து புகார் கூறிய சோனா. சமீபத்தில் இந்தி நடிகர் சல்மான் கான் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்காக சோனாவுக்கு கொலை மிரட்டல் வந்தது.

இந்நிலையில் சோனா தனது ட்வீட்டில் நடிகை சோனம் கபூர் மற்றும் பாடகி சின்மய் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு உங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை, ஆபாச குற்றச்சாட்டு போன்ற கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பாலியல் வன்முறை, அச்சுறுத்தல் அல்லது அச்சுறுத்தலை அனுபவித்த போது அணிந்திருந்த உடைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.சோனாவின் இந்த டிவிட்டர் மெசேஜிக்கு பலரும் பாராட்டு தெரிவித்தபோது சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். ஒரு நெட்டிஸன்,விளம்பர பசியில் இதுபோல் நீங்கள் பேசுகிறீர்கள், இது அனுதாபத்தைப் பெறுவதற்கான வேலை.

நீங்கள் உண்மையிலேயே பாலியல் துன்புறுத்தல் பற்றி கவலைப்பட்டால் எதற்காக அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சியாகப் புகைப்படங்கள் வெளியிடுகிறீர்கள். இது போன்று நாடகம் ஆடுவதை விட்டு விட்டு பாடுவதில் அக்கறை காட்டுங்கள். உங்கள் புகைப்படங்களில் கவர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது என்றார்.வம்பிழுத்த நெட்டிஸனுக்கு பதில் அளித்த சோனா. ஹலோ, இது என் உடம்பு. என் கவர்ச்சி. மிஸ்டர்! நீங்கள் யாராகவேண்டுமானாலும் இருங்கள். நான் என்ன விரும்புகிறேனோ அதைத் தான் செய்வேன் என சூடாக பதில் அளித்தார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்