பெரிய படம் ரிலீஸ் இல்லை: மற்ற படங்களுக்கு வாய்ப்பு.. சிறுபடங்களுக்கு தியேட்டர்கள் ஓபன்..

by Chandru, Nov 27, 2020, 12:16 PM IST

கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. ஆனால் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வி எப் எக்ஸ் கட்டண ப்ரச்னையால் விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ஏமாற்றம் ஏற்பட்டது. சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குறை பல வருடமாக திரையுலகில் நிலவி வருகிறது. ஆனால் சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது எளிதாக உள்ளது.தீபாவளிக்கு சந்தானம், நடித்த பிஸ்கோத், சந்தோஷ் ஜெயகுமார் நடித்த இரண்டாம் குத்து அதன்பிறகு கோட்டா, மர்ஜூவானா போன்ற படங்கள் தியேட்டரில் வெளியாகின. இந்நிலையில் காவல் துறை உங்கள் நண்பன் என்ற படம் இன்று வெளியாகிறது. இதற்கு இது இளன் நடிகர் நடித்த படமாக இருந்தாலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தின் மொத்த படக்குழுவும் முன் திரையிடல் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பிலும், பாராட்டிலும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தினை பற்றி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்துள்ள நேர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்த்து, நிறைய திரையரங்குகளில் படம் வெளியாக காரணமாக அமைந்துள்ளது. இப்படத்தை வெளியிடும் கிரியேட்டிவ் எண்டர்டைனர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட் டர்ஸ் (Creative Entertainers and Distributors) நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் கூறியதாவது: ஒரு அற்புதமான பயணம் “காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் எனக்கு அமைந்தது. பல்வேறு இடர் பாடுகளையும், பெரும் தடைகளையும் தாண்டி இப்படம் வெளிவந்துள்ளது. இப்படக்குழுவின் அயராத உழைப்பும், ஒன்றினைந்த உற்சாகத்திற்கும் இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. இந்த நீண்ட பொது முடக்க காலத்திலும் இப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்கிற எண்ணம் என்னுள் ஆழமாக இருந்தது.

தியேட்டரில் வெளியாகும்போது கண்டிப்பாக பெரும் பாராட்டுக்களை குவித்து, அனைவரையும் ஈர்க்கும் என உறுதியாக நம்பினேன். பத்திரிகையாளர்கள் காட்சிக்கு பிறகு ஊடக நண்பர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் அதிக பாராட்டுக்கள் கிடைத்தது. மக்களின் நேரடியான அசைக்க முடியாத பாராட்டுக்கள், நேர்மறை விமர்சனங்கள் படத்திற்கு வியாபார தளத்தில் மிகுந்த நல்ல பெயர் பெற்று தந்தது. அதோடு மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளும் கிடைத்தது. இப்படத்தினில் பங்கு கொண்டு இப்படத்தை பெரிய அளவில் முன்னெடுத்து சென்றதற்கு “காவல் துறை உங்கள் நண்பன்” படக்குழு சார்பாக இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தென்னிந்தியா முழுவதிலும் 334 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரசிகர்களிடம் இப்படம் பெரும் பாராட்டை பெறும் என நம்புகிறோம். “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் சென்னை 18, செங்கல்பட்டு 62, தெற்கு மற்றும் வடக்கு ஆற்காடு பகுதிகளில் 55, கோயம்புத்தூர் 56, மதுரை 36, திருச்சி 30, சேலம் 40, திருநெல்வேலி 16 மற்றும் கர்நாடகா 21 திரையரங்குகளில் வெளியாகிறது.

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தில் சுரேஷ் ரவி, ரவீணா ரவிமையப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மைம் கோபி, சரத் ரவி, ஆர்.ஜே முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை அமைக்க ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல். இயக்குநர் RDM இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை பாஸ்கரன், ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்கள். வெற்றிமாறனின் Grassroot film company உடன் இணைந்து Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை