தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் இளம் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் காக்கா முட்டை, ரம்மி, நம்ம வீட்டு பிள்ளை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரத்துக்கு முழு பங்களிப்பு கொடுப்பது தான் இவரது சிறப்பம்சம் என்று கூறலாம். காக்கா முட்டையில் நடித்த கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு எதார்த்தமாக அமைந்ததால் மக்கள் மனதை ஈசியாக கவர்ந்தார். தமிழ் சினிமாவில் நம்ம விட்டு பொன்னாக திகழ்கிறார்.
சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் நடித்த க.பெ. ரணசிங்கம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் சிறந்த வரவேற்பை அடைந்தது. கணவனின் இறந்த சடலத்தை கொண்டு வர மனைவி எந்த அளவிற்கு துணிகிறாள் என்பது தான் கதை கருவாக அமைந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாவட்டத்தில் புதிய காற்றழுத்த மண்டலமாக உருவாகி புயலாக மாறியது. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் நிவர் புயல் என்று பெயர் வைத்தனர். இதனால் சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டத்தில் பயங்கர காற்றோடு பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது காரில் விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். காற்று மற்றும் மழை பலமாக இருந்ததால் அவரால் தொடர்ந்து காரில் பயணிக்க முடியவில்லை. இதனால் மெட்ரோ ரயிலில் சேவையை உபயோகித்து சரியான நேரத்திற்கு விமானம் நிலையம் அடைந்துள்ளார். மெட்ரோ ரயிலில் பயணிப்பதை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் 'மெட்ரோ ரயில் தான் பெஸ்ட்' என்று பதிவிட்டுள்ளார். சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு மெட்ரோ ரயில் தான் முக்கியமான வேளைகளில் கைகொடுக்கிறது.