ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாதது ஏன்? - பிசிசிஐ விளக்கம்

by Sasitharan, Nov 27, 2020, 19:24 PM IST

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடந்த நிலையில், ஆஸ்திரேலியா வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் முதலில் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய அணியுடன் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. காயம் குணமடைந்தால் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே கடும் எதிர்ப்பு காரணமாக ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். அவர் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு புறப்படுவார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருவரது காயமும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என கூறப்படுகிறது. காயம் குணமடைய இன்னும் குறைந்தது ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என தெரிகிறது. அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றால் இரண்டு வாரம் சுய தனிமையில் இருக்க வேண்டும். அதன்பிறகே போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்பதால் ரோகித் சர்மாவும், இஷாந்த் சர்மாவும் ஆஸ்திரேலியா செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ``ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாததுக்கு காயம் மட்டும் காரணமில்லை. தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலேயே ரோகித் சர்மாவால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை" என்று பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது.

You'r reading ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லாதது ஏன்? - பிசிசிஐ விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை