4 பிரபல இயக்குனர்களின் ஆந்தாலஜி படம்.. “பாவகதைகள்” டீஸர் வெளியீடு

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவ கதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர்.

“பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் ஆர் எஸ்விபி மூவிஸ் (RSVP Movies) நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் ஃபிளையிங் யுனிகார்ன் எண்டர்டெயின் மெண்ட் (Flying Unicorn Entertainment) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார் கள். நெட்ஃப்ளிஸ் (Netflix) நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது.

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கவுதம் வாசு தேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சுதா கொங்கரா ஷான் கருப்பசாமி கதை எழுத சுதா கொங்கரா இயக்கி உள்ள கதையில் நடிகர்கள் பவானிஶ்ரீ, காளிதாஸ் ஜெய ராம், சாந்தனு பாக்யராஜ்.

விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ள படத்தில் அஞ்சலி, கல்கி கொச்சிலின், பதம் குமார் நடித்துள்ளனர்.வெற்றி மாறன் எழுதி இயக்கி உள்ள படத்தில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி உள்ள படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் , சிம்ரன் நடித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :