ஷிவானி- ஆரி உரையாடல் ,ஆரியின் ஸ்டேட்மெண்ட் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 55

Advertisement

நமக்கு 55 நாள் ஆச்சு. உள்ள 53 தான் ஆகிருக்கு. இதை எப்படி சரி செய்வாங்கனு தெரியல. டெலிபோன் சம்பந்தபட்ட டாஸ்க் போயிட்டு இருக்கறதால கர்ணா படத்துல இருந்து "டெலிபோன் அடிக்குது" பாட்டு போட்டாங்க. நல்லா பீட் சாங் போட்டாலே ஆடறதில்லை. இந்த பாட்டுக்கு என்ன டான்ஸ் வேண்டிக்கிடக்குனு விட்ருப்பாங்க. ஹவுஸ்மேட்ஸ் பாதி பேருக்கு இந்த பாட்டே தெரிஞ்சுருக்காது.

அன்றைய நாளோட முதல் காலரா நிஷா வந்தாங்க. அனிதாவுக்கு போன் பண்ணி அவங்க பர்சனல் பஞ்சாயத்து பத்தி தான் பேசினாங்க. அனிதா எவ்வளவு கேம் கான்ஷியஸோட விளையாடறங்கனு நாம தெரிஞ்சுக்க இந்த கான்வோ ஒரு உதாரணம். கமல் சார் முன்னாடி ஒரு தடவை அனிதாவை நாமினேட் செஞ்சாங்க நிஷா. அதை பத்தின பேச்சு வந்த போது அன்னிக்கு நிஷா என்ன வார்த்தைகளை பேசினாங்களோ, அதை அட்சரம் பிசகாம திருப்பி சொல்லுது இந்த பொண்ணு. நமக்கு நாம சொல்ற வார்த்தையே ஞாபகம் இருக்கறதில்லை.

கடைசி வரைக்கும் கால் கட் பண்ணாம பேசிட்டு இருந்தா நம்மளை வச்சு செஞ்சுரும்னு நினைச்சாங்களோ என்னவோ, நானே நாமினேட் ஆகிடறேன்னு சொல்லி கால் கட் பண்ணிட்டாங்க. பரஸ்பரம் ரெண்டு பேருமே ஓவர் வழிசல் பேச்சு தான் ரொம்ப இரிடேட் ஆச்சு.

அடுத்து நேற்றைய முக்கியமான நிகழ்வு. ஷிவானிக்கு கால் பண்ணி பேசறாரு ஆரி. எனக்கு வேற யாரும் கிடைக்கலம்மா, எல்லாரும் செலக்ட் செஞ்சது போக, நீங்க தான் எனக்கு கிடைச்சீங்கனு டிஸ்கிளைமர் கொடுத்தது எதுக்குனு அவரவர் கற்பனைக்கே...

பாலா, கேப்பி இடையிலான ஹானஸ்டி பிரச்சினைல ஷிவானி பேர் அடிபட்டது.. பாலா வெளிய போனதுக்கு அப்புறம் சுச்சியும், ஷிவானியும் தான் ஹானஸ்ட் வார்த்தையை எடுத்து சொல்லி மறுபடியும் உள்ள கூட்டிட்டு வருவாங்க. அதை பத்தின பேச்சு வரும்போது, ஷிவானி பேரை சொல்ல பாலா தயங்கினதாகவும், அதனால தான் காதல் கண்ணை மறைக்குதுனு சொன்னதாகவும் ஆரியோட ஸ்டேட்மெண்ட். வெளிய போய் பேசின சம்பந்தபட்டவங்களே இதை சொல்லிட்டா நல்லதுனு கமல் சார் சொன்னதும் ஷிவானி, சுச்சி ரெண்டு பேரும் பேசினது தான் என் நினைவில் இருக்கு. இதுல பாலா தயங்கினதா ஆரி சொல்றது பத்தின காட்சிகள் நமக்கு காண்பிக்கபட்டதா நினைவில் இல்லை.

இந்த வீட்ல அதிகமா யார் கூட டைம் ஸ்பெண்ட் செய்யறீங்கனு கேட்டதுக்கு சம்யுக்தா, பாலா, ரம்யா 3 பேர் சொன்னாங்க. பாலா மேல நீங்க வச்சுருக்கறது அன்பா? காதலா? என்ற கேள்விக்கு எந்த தயக்கமும் இல்லாம அன்பான நட்புதான்னு பதில் சொன்னாங்க ஷிவானி. அதன் பிறகும் "அப்ப அது காதல் கிடையாது"? திரும்பவும் அந்த கேள்வியை கேட்ட போது, ஆரி எதிர்பார்த்த பதில் கிடைக்கலனு தெரிஞ்சுது. இந்த கேள்வியை கேட்டதுக்கு ஆரி கொடுத்த ஜஸ்டிபிகேஷன் தான் முக்கியமானது. "நானா எந்த முடிவுக்கு வரக்கூடாதுன்னு தான் உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்." " இப்ப நீங்க சொல்லிட்டீங்க, இனிமே எனக்கு குழப்பமில்லை, நான் இனிமே தவறா பார்க்க மாட்டேன்." இதான் ஆரி பேசினது. இதை அவர் பேசும் போது எவ்வளவு தடுமாறினாருனு நீங்க பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

ரைட் இதுல சில கேள்விகள் இருக்கு. பாலா, ஷிவானி ஒன்னா இருக்கறது மட்டும் தான் நமக்கு காண்பிக்கப்படுது. சுச்சியோட ஸ்டேட்மெண்ட் படி பாலா ஷிவானிக்கு லவ் சாங்ஸ்லாம் போட்டு ப்ரோமோ போட்டு, ஆடியன்ஸை கன்வின்ஸ் செஞ்சது விஜய் டிவி. சுச்சி உள்ள வந்ததுக்கு அப்புறம், "நான் இங்க பார்த்தது வேற"னு அவங்களே சொன்னாங்க. காதல் கண்ணை மறைக்குதுனு பிக்பாஸ் சொன்னபோது, இங்க யாரும் காதல் செய்ய வரலை. அப்படிலாம் ஒன்னும் இல்லைனு பாலா சொல்லிட்டாரு. இப்ப ஷிவானியும் இல்லனு சொல்லிட்டாங்க. ஆனா ஆடியன்ஸ்ல பல பேரு இதை ஒத்துக்கப் போறதில்லை.

இப்ப ஆரி கொடுத்த ஸ்டேட்மெண்ட்டுக்கு வருவோம். " நானா எந்த முடிவுக்கும் வரக்கூடாதுன்னு தான் உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்" இப்படி சொல்ற ஆரி "காதல் கண்ணை மறைக்குதுனு" எப்படி முடிவு எடுத்தாரு. இனிமே எனக்கு குழப்பமில்லைனு சொன்னாரு. இதுல ஆரி குழப்பிக்கறதுக்கு என்ன இருக்கு. அங்க இருக்கற 11 பேருக்கு வராத குழப்பம் இவருக்கு வந்துருக்கு. இந்த வீட்ல அடுத்தவங்களோட நடவடிக்கைகளை பார்த்து கன்ப்யூஸ் ஆகனும்னா, நிறைய பேர் இருக்காங்களே. அடுத்து "நானும் தவறா பார்க்க மாட்டேன்" சொன்னதை டீகோட் செய்ய வேனாம்னு தோணுது.

ஆரி இந்த கேள்வியை கேட்க அவருக்கே அரை மனசு தான்னு தோணுது. ஏன்னா ரொம்ப யோசிச்சு பிரிப்பேர் செஞ்சு பேசின விஷயம். கேள்விகள் கேக்கும் போதே அதுக்கான பதில்கள் எப்படி வரும்னு தெரிஞ்சு, அதுக்கு சேர்த்து தான் யோசிப்போம். அப்படி இருக்கும் போது, ஆரி ஏன் தடுமாறனும். நியாயப்படி பார்த்தா இவ்வளவு பர்சனலான கேள்வியை அனிதா, சனம் கிட்ட கேட்ருந்தா,? கேட்ருந்தா என்ன கேக்கனும்னு நினைச்சுருக்க கூட முடியாது. ஆனா ஷிவானி ஒரு எதிர்கேள்வி கூட கேக்காம முகம் சுளிக்காம, பதில் சொன்னது கமல் சார் பாராட்டும் ஒரு தருணம். ரம்யா கேட்ட கேள்விக்கு ரமேஷ் மௌனமா இருந்த நேரத்தை நினைவுபடுத்தி பாருங்க. அதே மாதிரி டாஸ்க் முடிஞ்சு வந்து ஒரு வார்த்தை கூட ஆரி கிட்ட பேசலை. சோ இந்த டாஸ்க்ல ஸ்கோர் செஞ்சது ஷிவானி தான்.

இதுல நோட் பண்ண வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் ஒன்னு இருக்கு. மத்தவங்க பேசும் போது வீட்டுக்குள்ள இருந்தவங்களோட ரியாக்சனை காட்டின பிக்பாஸ், ஆரி - ஷிவானி பேசும் போது யாரையுமே காட்டலை. ஷிவானி பேசும் போது வீட்டுக்குள்ள சரியா கேக்கலை. கூடவே அர்ச்சனா, ரியோ கிச்சன்ல இருந்திருக்காங்க. போல.

இந்த வீடே சூனியம் மாதிரி இருக்கு. யாருக்கும் குட்மார்னிங் சொல்லக் கூட தோணலைனு ரியோ கிட்ட சொல்றாங்க சனம். ஆக்சுவலா ரியோ-பாலா இடையிலான சண்டையை பத்தி ரெண்டு பேர்கிட்டயும் தனித்தனியா பேசிருக்காங்க. பாலாவோட அலட்சிய உடல்மொழி, அவமானத்தை உண்டாக்கும் பேச்சு ரெண்டுமே ரியோவுக்கு பிரச்சினை. ஹவுஸ்கீப்பிங் பிரச்சினைல ரியோ அவமானபடுத்தபட்டது இன்னும் அவர் மறக்கலை. மறுபடியும் அவன் கிட்ட பேசி அவமானபட வேண்டாம்னு ஒதுங்கி நிக்கறாரு ரியோ.

நிவர் புயலுக்காக ஹவுஸ்மேட்ஸை தனியா தங்க வைக்க ஏற்பாடு பண்ணி வெளிய அனுப்பிட்டாங்க. அதுவும் இரவு மட்டும் தானாம். அதுக்குள்ள எவ்வளவு வதந்தி.. ராஸ்கல்ஸ். அடுத்த நாள் காலைல உள்ள வந்துட்டாங்க.

நல்ல மழைல ராயபுரம் பீட்டரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினாங்க...

காலைல எல்லாரும் கேப்டன் கிட்ட டைம் கேட்டு தூங்கிட்டு இருந்தாங்க. பாலா நேரடியா கேக்காம வைஸ் கேப்டன் ஷிவானி கிட்ட கேட்டு தூங்க போனாரு. அதை பார்த்து சனம் கேட்க ரியோ காமெடியா சொன்ன வார்த்தைகள் அவருக்கு பிரச்சினையை உண்டாக்கும்.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதனால இந்த டாஸ்க்ல நாமேட் ஆனதும் செல்லாதுனு சொல்லிட்டாரு பிக்பாஸ். சோ அடுத்த வாரம் நாமினேஷன் எப்பவும் போல நடக்கும்னு சொல்லிட்டாரு.

இந்த வார சிறந்த பர்பாமர் தேர்ந்தெடுக்கும் நேரம். பாலா, ரமேஷ், ரியோ மூணு பேரும் செலக்ட் ஆனாங்க. இதுல பாலா செலக்ட் ஆனது ஏன்னு தெரியல. நியாயமா பார்த்தா ஷிவானி தான் செலக்ட் ஆகிருக்கனும். ரமேஷ், ஷிவானி ரெண்டு பேரும் தான் சிக்கலான கேள்விகளை எதிர் கொண்டு அமைதியா பதில் சொன்னாங்க. அதே மாதிரி டாஸ்க் முடிஞ்சதும் அதை மறந்துட்டாங்க. கிச்சன் டீம் பர்பாமன்ஸுக்காக ரம்யா தேர்ந்தெடுக்கபட்டாங்க.

வொர்ஸ்ட் பர்பாமருக்கு ஆரி, ரியோ, நிஷா பேரை தான் சொன்னாங்க. அர்ச்சனா டீம் நிஷா பேரை சொல்ல, மத்தவங்க ரியோ பேரை சொன்னாங்க. உண்மையிலேயே இந்த வாரம் ரியோவுக்கு சவாலான வாரம். ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போனாங்க.

அங்க போனதுக்கு அப்புறம் பாலாவை பத்தி தான் பேச்சு வந்தது. ஒன்னு மட்டும் நல்லா தெரியுது, பாலாவும் ஆரியும் ஒருத்தரை ஒருத்தர் உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்காங்க. ரெண்டு பேருமே அடத்தவங்களோட சின்ன சின்ன அசைவை கூட கவனிச்சு சொல்லி அதுக்கு ஒரு ஜஸ்டிபிகேஷன் கொடுக்கறாங்க. இங்க பாலாவை தவிர நிறைய பேர் இருக்காங்கனு ரியோ சொன்னது முக்கியமான விஷயம்.

இன்னிக்கு தேதிக்கு பாலா தான் இந்த வீட்டோட ஹாட் கண்டஸ்டண்ட். இந்த போன் டாஸ்க்ல கூட அர்ச்சனா, ஆரி, சனம் வரைக்கும் பாலாவை தான் கேட்ருக்காங்க. தன்னை எதிர்த்து சண்டை போட்டு, தூண்டி விட்டு பேச வச்சு மத்தவங்க மைலேஜ் ஏத்திக்கறாங்கனு பாலாவுக்கு ஒரு எண்ணம் இருக்கு. இந்த வாரமும் அர்ச்சனா டீம்னால குரூப்பா டார்கெட் செய்யப்பட்டார் பாலா. கேப்பி வரைக்கும் பாலா கூட சண்டைக்கு நின்னாங்க. சோ அதனால பாலாவுக்கு அப்படி தோணிருக்கலாம். சனம் ஒரு தடவை அதை செஞ்சதால எல்லாரும் எப்பவும் அதே எண்ணத்தோட தான் சண்டை போடுவாங்கனு சொல்ல முடியாது.

ஹமாம் சோப் வழங்கிய டாஸ்க் ஒன்னு நடந்தது. ரம்யா & அனிதா தான் ஜெயிச்சாங்க. ஓய்வெடுக்கும் அறைல இருந்து சிலம்பம் சொல்லிக்கொடுத்தாரு ஆரி. இந்த டாஸ்க்ல அவர் தான் நடுவரா இருந்திருக்கனும். டாஸ்க் போது அவரை உள்ள வச்சுடு டாஸ்க் முடிஞ்சதும் வெளிய அனுப்பறாங்க. என்ன ப்ளானிங்கோ. இந்த டாஸ்க்ல நடுவரா சோம் & அர்ச்சனா தான். இதுல ஸ்கோர் பண்ண கிடைச்ச வாய்ப்பையும் சோம் கோட்டை விட்டு மாதிரி இருந்தது.

இந்த வாரம் கமல் சார் பேச நிறைய பஞ்சாயத்து இருக்கு. என்ன நடக்குதுனு பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>