நூடுல்ஸ் மண்டை கிண்டலுக்கு முடிவு கட்டிய நடிகை..

by Chandru, Nov 28, 2020, 13:44 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் இறுதிச்சுற்று. இதில் ரித்திகா சிங் ஹீரோயினாக அறிமுகமானார், இவர் மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் ( கிக் பாக்ஸர்) தெரிந்தவர். படத்திலும் கிக் பாக்ஸராக நடித்திருந்தார். அடுத்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார். பிறகு ஓ மை கடவுளே படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்திருந்தார். அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.

ரித்திகாவை அன்புடன் நூடுல்ஸ் மண்டை என்று அழைத்தனர், ஓ மை கடவுளே என்ற படத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெயர் இது. இப்படத்தில் அசோக் செல்வன், வாணி போஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரித்திகாவுக்கு நீண்ட அழகிய கூந்தல் சுருள் சுருளாக இருக்கும். அவரது ஹேர் ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால் என்ன நினைத்தாரோ திடீரென்று தனது நீண்ட கூந்தலை வெட்டித்தள்ளி விட்டார் ரித்திகா சிங். அதற்கு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் காரணங்கள் கூறி இருக்கிறார்.

எனக்கு நீண்ட கூந்தல். என முகத்தில் அந்த கூந்தல் விழுந்து ஒரு பக்கம் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கும். என் முகத்தை மக்கள் முழுமையாகப் பார்க்க வேண்டும் என்பதால் கூந்தலை வெட்டி ஷார்ட் ஹேர் ஸ்டைலுக்கு மாற்றிவிட்டேன். எனக்கே இப்போது ரொம்பவும் சவுகரியமாக இருக்கிறது. முன்பைவிட இளமையாகத் தெரிகிறேன். ரொம்பவும் அழகாக இருக்கிறேன்.பலரும் கூந்தலை வெட்ட வேண்டாம் என்றார்கள். பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்தது என்பது எனக்கும் தெரியும் .

ஆனால் இப்போது பாருங்கள் எவ்வளவு குறைந்த தலைமுடி.. சூப்பரா இருக்கேன்தானே.. என வீடியோவில் தன் அழகை தானே வர்ணித்து ரசிகர்களைத் திணற வைத்தார் ரித்திகா சிங்.இனிமேல் தன்னை நூடுல்ஸ் மண்டை என்று யாரும் அழைக்க மாட்டார்கள் என்பது ரித்திகாவின் நம்பிக்கை. ரித்திகா தற்போது பாக்ஸர் படத்திலும், வணங்காமுடி படத்திலும் நடித்து வருகிறார்.

You'r reading நூடுல்ஸ் மண்டை கிண்டலுக்கு முடிவு கட்டிய நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை