யூடியூப் சேனல் தொடங்க நடிகர் விஜய் முடிவு
நடிகர் விஜய், மக்கள் இயக்கம் என்ற பெயரில் யூட்யூப் சேனல் துவங்க முடிவு செய்திருக்கிறாராம். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் எந்த கட்சியினரும் தனது பெயர் மற்றும் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் நடிகர் விஜய்.
இதற்காக, விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடிப் சேனலை தொடங்க உள்ளார். நடிகர் விஜய் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்யும் சமூக பணிகள் குறித்தும் இந்த சேனலில் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
More Cinema News
READ MORE ABOUT :