தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17.12.2020 முதல் தமிழகம் முழுவதும் மூன்று கட்ட போராட்டங்கள் நடைபெறுமென தேனியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 ஆக அதிகரித்ததை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது 5000 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு போடப்பட்ட 17 B நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மூன்று கட்ட போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகமாநில பொதுச் செயலாளர் ச.மயில் தெரிவித்துள்ளார்.














