தமிழ், இந்தி ஹாலிவுட் என உலகம் முழுவதும் திரையுலகை சுற்றி வந்தவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இந்தியாவில் பாஃப்டா திருப்புமுனை முயற்சியின் தூதராகி உள்ளார். பாஃப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக வெளிப்படுத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்படம், விளையாட்டு மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் இந்தியா வழங்க வேண்டிய சில அற்புதமான திறமைகளைக் கண்டறிய பாஃப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகப் புகழ்பெற்ற அமைப்பால் ஆதரிக்கப்படும் கலைஞர்களுக்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும்.
உலகெங்கிலும் உள்ள பிற திறமையான படைப்பாளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பாஃப்டா வெற்றியாளர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்களால் வழிநடத்தப்பட வேண்டும். இந்த முயற்சி ஒரு திறமை வேட்டை நிகழ்வாகும், அங்கு அகாடமி நாட்டில் திரைப்படம், விளையாட்டுகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஐந்து திறமைகளை அடையாளம் கண்டு வளர்க்கும். பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் திறமையான நபர்களைத் தேர்ந்தெடுக்கும், மேலும் அவர்கள் பாஃப்டா திருப்புமுனை கலைஞர்களாக உயர்த்தப்படுவார்கள். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான கூறினார். இந்தியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரணம் நிகழ்ந்தது. அவர் கடைசியாக நடித்த தில் பேச்சாரே படத்துக்கு ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட் வாரிசு நட்சத்திரங்களால் ஒதுக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் ரஹ்மானும் தன்னை பாலிவுட்டில் ஓரம் கட்டுகிறார்கள். தனக்கு வரும் வாய்ப்புகளை அங்குள்ள வேறு இசை அமைப்பாளருக்கு ஒதுக்குகிறார்கள் என்று புகார் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது தனுஷ் நடிக்கும் அட்ரங்கிரே இந்தி படத்திற்கு இசையமைக்கிறார் ரஹ்மான். சியான் விக்ரமின் கோப்ராவுக்கும் இசையமைத்துள்ளார். இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ்.ரவி குமார், மியா ஜார்ஜ், மிர்னலினி ரவி, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.