திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்வது ஹாலிவுட் கலாச்சாரம் அது மெல்லப் பரவி பாலிவுட் வந்து தற்போது கோலிவுட்டிலும் அந்த கலாச்சாரம் நிலவி வருகிறது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்கிறார். பாலிவுட்டிலும் இதுபோல் பல ஜோடிகள் உள்ளன.தற்போது அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரித்து வருகிறார் போனி கபூர். இவரது மகன் அர்ஜுன் கபூர். இந்தியில் இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இவர் இந்தி நடிகை மல்லைகா அரோராவுடன் கடந்த 3 வருடமாக லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூருக்குத் திருமணம் ஆகவில்லை ஆனால் மல்லைகா ஆரோராவுக்கு இந்தி நடிகர் அர்பாஸ் கானுடன் திருமணம் ஆனது. இருவரும் 19 வருடம் இணைந்து வாழ்ந்தார்கள். இவர்களுக்கு அர்ஹான் என்ற 18 வயது மகனும் இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு அர்பாஸ் -மலைக்கா விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். அதன்பிறகு அர்ஜூன் கபூருடன் மலைகா லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2 மாதத்துக்கு முன் மலைகா அரோரா கொரோ னா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டிலிருந்து விலகி கெஸ்ட் அவுஸில் தங்கினார். தாயைப் பிரிந்த மகன் அர்பாஸ் அவரை தன் வீட்டுத் தோட்டத்தில் நின்றபடி பார்த்து ஆறுதல் அடைந்தார். மலைகா வளர்க்கும் செல்ல நாயும் அர்பாஸுடன் நின்ற படி அவரை ஏக்கமாகப் பார்த்தது. இப்படங்கள் அப்போது வெளியாகி வைரலானது. சிகிச்சைக்குப் பிறகு மலைகா குணம் அடைந்தார்.
சமீபத்தில் அர்ஜூன் கபூர் இந்தி படப் படப்பிடிப்புக்காக தர்மசாலா சென்றார். அவருடன் மலைகா அரோராவும் சென்றார். அங்குள்ள இடங்களை அர்ஜூனுடன் இணைந்து சுற்றிப்பார்த்தார் மலைகா. பிறகு அர்ஜுனைக் கட்டிப்பிடித்தபடி ஒரு புகைப்படம் வெளியிட்டு,நீ என் அருகில் இருக்கும்போது எனக்குச் சோர்வு என்பதே கிடையாது என்று அர்ஜுனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் மலைகா மும்பை திரும்பினார். அர்ஜூன் கபூர் படப்பிடிப்புக்காக தரமசாலாவில் தங்கினார்.