திகில் பட ட்ரையல் ஷூட்டில் கணவருடன் பங்கேற்ற நடிகை..

by Chandru, Dec 1, 2020, 10:49 AM IST

நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் வீட்டில் 7 மாதம் செலவழித்தார். அவருக்கு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். காஜலும் திருமணத்துக்கு சம்மதித்தார். பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். இது கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்த திருமணம் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு அவர் ஷூட்டிங் செல்லும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் ஷூட்டிங்கிற்கான அழைப்பு வராததால் கணவருடன் மாலத்தீவுக்குத் தேனிலவு புறப்பட்டார். ஒரு மாதம் சலிக்கச் சலிக்க தேனிலவை அனுபவித்தார். கடலுக்கு அடியில் ஸ்கூபா நீச்சல் செய்ததுடன் கடலுக்கு அடியில் இருக்கும் ரெஸ்டாரண்ட்டில் உணவருந்தினார். அந்த படங்களைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ஒருமாத தேனிலவு முடிந்த நிலையில் அவர் ஷூட்டிங் திரும்புகிறார்.

காட்டேரி பட இயக்குனர் டிகே நடிகை காஜலின் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார். இவர் இயக்கும் படத்தில் காஜல் நடிக்கிறார். திகில் படமாக உருவாகும் இதில் ஒரு காட்சியை ட்ரையல் ஷூட் நடத்தினார் இயக்குனர். காஜல் ஒரு பையை வைத்துக் கொண்டு முகத்தின் ஒரு பகுதியை மறைத்திருக்கப் பின்பக்கமிருந்து அவரது கணவர் கவுதம் எட்டிப்பார்த்து திகில் அடைகிறார்.

டீகே இயக்கும் இப்படம் 4 ஹீரோயின்கள் கொண்ட கதையாக உருவாகிறது. ஆனால் ஆந்தாலஜி படம் இல்லை. காஜல் ஏற்கனவே டீகே இயக்கத்தில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படக்குழு இன்னும் சில நடிகைகளிடம் பேசி வருகிறது.
காஜலை பொருத்தவரை கமலுடன் இந்தியன் 2ம் பாகம் மற்றும் துல்கர் சல்மானுடன் ஹே சினமிகா படங்களில் நடிக்கிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்